2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

By Ramya s  |  First Published Dec 27, 2023, 6:12 PM IST

2024-ம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


தனது சொந்தக்காலில் நின்று சாதனை புரிய வேண்டும் என்று தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொழில் மற்றும் வருமானத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.பிறரிடம் கைகட்டி வேலை செய்ய விரும்ப மாட்டீர்கள். உங்கள் மனதில் எவ்வளவு சோகம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.. நேர்மையை கடைபிடித்து நடப்பதால் கம்பீரமாக வெற்றி நடை போடுவீர்கள். 

கடந்த ஏழரை ஆண்டுகள் உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்து வந்த சனி பகவான் இனி அற்புத மாற்றங்கலை தரப்போகிறார். நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் பன்மடங்காக உயரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏழரை சனியால் தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு இனி நிம்மதியாக தூக்கம் வரும். மன நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் மீது இருந்த கெட்ட பெயர்கள் அனைத்தும் நீங்கப்போகிறது. வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் ஆண்டாக இந்த அண்டு இருக்கும். திட்டமிடாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட தொடங்கும். திடீர் வெளிநாட்டு பயணங்கள் அமையும். பாசம் காட்டாத உற்றார், உறவினர்கள் பாசம் காட்ட தொடங்குவீர்கள். உடலில் இருந்த உபாதைகளும் குழப்பங்களும் நீங்கும். சொத்து பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படும். அதே நேரம் திரும்ப திரும்ப செலவு வைக்கும் வாகனங்களை மாற்றிவிடவும்.

பழைய நண்பர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் யாரிடமும் மனம்விட்டு பேச வேண்டாம். ஊழியர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் காலமாக இது இருக்கும். எனினும் உங்கள் பணிகளில் அதிக சிரத்தையும், முயற்சியும் தேவை. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்திலும் குறைந்தபட்ச லாபம் உறுதியாக கிடைக்கும். கூட்டு வியாபாரங்களில் கணக்கு விவரங்களை சரியாக வைத்து கொள்வது நலல்து.

2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் மூலம் உங்களின் பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை சரியாக படித்து பார்ப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் குறையாலாம். எனினும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். குடும்பத்திலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

click me!