2024-ம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்போதும் இன்முகத்துடனும் இருக்கும் நீங்கள், எல்லோரிடமும் இனிய பேச்சுடன் பழகி அனைவரும் ஈர்க்கும் தன்மை உங்களிடம் இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். பொருளாதாரம் சிறப்பாக அமையும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து, நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள்..
வெளியூர் அல்லது வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சுயநலமின்றி அனைவருக்கும் உதவி செய்வீர்கள். மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.. எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறையாக சிந்திக்க தொடங்குவீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கி இருந்தவர்களுக்கு குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். அக்கறையுடனும், கவனத்துடனும் பணிகளை மேற்கொள்வது நல்லது.
வியாபாரிகளுக்கு தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.
2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டும் அளவுக்கு நடந்து கொள்வீர்கள். சிலருக்க்கு படிக்கும் போதே வேலைவாய்ப்பு அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்பத்தினரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்வீர்கள். திருமண வயதை எட்டிய பெண்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு குழந்தை பேறு கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறைந்து சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை வசதியை பெருக்கிக் கொள்ளும் சிறப்பாக காலக்கட்டமாக இது இருக்கும். பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறலாம். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழ் அடைவீர்கள். மனதிலும் தன்னம்பிக்கையும், வைராக்கியமும் அதிகரிக்கும்.