2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

By Ramya s  |  First Published Dec 30, 2023, 10:59 AM IST

2024-ம் ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


கடல் போல் பரந்த மனப்பான்மை கொண்ட மகர ராசிக்காரர்களே இந்த ஆண்டு உங்களுகு ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் வந்து சேரும். உங்களின் பொருளாதார நிலை மேம்படும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். புத்திக்கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் உங்களிடம் இருக்கும்.

உங்கள் கடின உழைப்பின் மூலம் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் கூட்டாளிகள் தேவைக்கேற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்து காரியங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.

Tap to resize

Latest Videos

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் கவலை இல்லாமல் பேசி மகிழ்வீர்கள். சமூகத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். பங்குச்சந்தை போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். அதீத சந்தேக குணம் கொண்டவர்கள் குழப்பவாதிகளிடம் இருந்து விலகி இருங்கள். உங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து சில சலுகைகள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் உயர்வை கண்டு உற்றார் உறவினர் ஆச்சர்யப்படுவார்கள். வருமானம் சீராக வந்து கொண்டிருந்தாலும் சில விரங்களும் ஏற்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உள்ளது.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள்.

2024 புத்தாண்டு ராசி பலன் : அடுத்த ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

வியாபார்கள் ஓய்வில்லாம்ல் உழைத்து நல்ல லாபம் காண்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகளை சமாளித்து புதிய உத்திகளை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். தொழில் வியாபாரத்தில் கொடுக்க வாங்கல் சிறப்பாகவே இருக்கும்.

மாணவர்கள் கல்வித்துறையில் சாதனைகளை படைப்பார்கள். பெற்றோர் – ஆசிரியரின் பாராட்டை பெற்று மகிழ்வீர்கள்.. சிலருக்கு படித்து கொண்டிருக்கும் போதே நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். சக கலைஞர்களின் பாராட்டும் கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும், சேமிப்புகள் உயரும்.

பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனை இல்லாத வகையில் நல்ல முறையில் நடத்தி செல்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். உங்களின் சேமிப்பு பெருகி மகிழ்ச்சி அடைவீர்கள். எனினும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுக்காமல், வங்கிகளில் சேமிப்பது அவசியம். இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடந்த காலங்களில் வாட்டி வந்த நோய்கள் குணமாகும். எனினும் சிலருக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.

click me!