பக்கவாதம் யாருக்கு எப்போது பாதிக்கும்? மருத்துவ ஜோதிடம் சொல்லும் பரிகாரம் என்ன?

By Asianet Tamil  |  First Published Jul 20, 2024, 11:03 AM IST

பக்கவாதம் எனப்படும் ஆர்த்ரைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. மூட்டுப்பிடிப்பு ஆண்களைக்காட்டிலும் பெண்களையே அதிகமாகத் தாக்குகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ வருகிறது. இந்த நோய் எதனால் வருகிறது. நோய் நீங்குவதற்கு மருத்துவ சிகிச்சை பார்க்கும் அதே நேரத்தில் ஜோதிட ரீதியான பரிகாரம் என்ன உள்ளது என்று பார்க்கலாம்.


நன்றாக நடமாடிக்கொண்டிருந்த மனிதர் திடீர் என்று வாய் கோணி, ஒரு பக்கம் கை கால்கள் இழுத்துக்கொண்டு படுத்து விடுவார். பக்கவாதம் என்று டாக்டர்கள் சொன்ன பிறகுதான் தெரியும். ஆனால் அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே உணர்த்தியிருக்கும். அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு ஆளையே படுக்க வைத்து விடும். பக்கவாதம் வந்து விட்டதே என்று பயப்பட வேண்டாம். அதற்கு சரியான சிகிச்சையும் பரிகாரமும் செய்தால் நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

பக்கவாதம் அறிகுறி:
முகத்தில் அல்லது உடலில் ஒரு பக்கத்தில் மரத்துப்போதல், பலவீனம் அடைதல், தளர்ச்சி அடைதல் அல்லது ஒரு பக்கமாக இழுப்பது போன்ற உணர்வு போன்றவை பக்கவாதத்தின் அறிகுறியாகும். நடக்கும்போது தள்ளாடுதல் நேராக நிற்க முடியாத நிலைமை வரும். ஒரு காலில் மட்டும் உணர்ச்சி குறைந்திருப்பது பக்கவாதத்தின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தெரிந்த உடனே சுதாரித்தால் நோய் பாதிப்பில் இருந்து ஆளை காப்பாற்றலாம்.

சனி பெயர்ச்சி பலன் 2024: சனி தரும் சச யோகம்; தலையெழுத்து மாறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

பக்தவாதம் வர காரணங்கள்:
பக்கவாதம் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. இது பொதுவாக நாற்பது வயதிற்கு மேல் ஏற்படுகிறது. அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாலோ, அல்லது உடலை அதிகமாக வருத்திக் கொள்வதாலோ வருகிறது. மூளையின் ஒரு பக்கத்தில் ரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதை ஸ்டோர்க் அல்லது பக்கவாதம் என்று சொல்கிறோம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக ரத்தக் கொழுப்பு, மாரடைப்பு, இதயவால்வு கோளாறுகள், இதயச் செயலிழப்பு, இதயத்துடிப்புக் கோளாறுகள் போன்றவை பக்கவாதம் வருவதற்கு காரணமாக அமைகின்றனர். முன் அறிவிப்புகள் எதுவுமின்றி பக்கவாதம் பெரும்பாலும் திடீரென்றுதான் வருகிறது.

Tap to resize

Latest Videos

சந்தோஷம் தரும் சந்திரன்; சனியோடு சேர்ந்தால் வரும் புனர்ப்பூ தோஷம்; பரிகாரம் என்ன?

ஜோதிட ரீதியாக பக்கவாதம்
ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவு பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி தொடர்பு ஏற்படுவது , காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்ரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்ரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயை தெரிவிக்கிறது. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது வாத நோயை ஏற்படுத்தும்.

வாத நோய்க்கு காரணமான கிரகம்:
பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி,செவ்வாய் இணைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது. எலும்பிற்கு காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் ஒருவரின் ஜாதகத்தில் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது.

மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது:
வெங்காயம் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதய தமனிகள் தடிமனாவதை தடுக்கிறது. முக்கியமான நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மூளையின் செயல்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. பக்கவாதநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கோவைக்காய் சூரணத்தை சாப்பிட்டு வர பூரண குணமாகும். பித்தம் மற்றும் கபம் நோய்களுக்கும் இது கண்கண்ட மருந்தாகும். மேலும் தோல் தொடர்புடைய அனைத்து நோய்களையும் இது குணமாக்கும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:
உணவில் அதிகம் உப்பு, புளியை தொடவே கூடாது. உணவில் அதிகமான அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய், பழைய சாதத்தைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்த நோயை வராமல் தவிர்ப்பது முக்கியம். நேரம் தவறாமல் சாப்பிடுங்க சரியான தூங்கி எழுந்தாலே நோய்கள் எட்டிப்பார்க்காது.

சூரிய நமஸ்காரம் நல்லது:
சனிக் கிழமை மற்றும் புதன் கிழமைகளில் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பதன் மூலம் பக்தவாத நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.  புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவகிரக புதன் சன்னதிகளில் நரம்பை பலப்படுத்தும் புரத சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்து பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடலாம்.

click me!