குரு பெயர்ச்சி பலன் 2024: கோடி நன்மை தரப்போகும் குரு பார்வை; தொட்டதெல்லாம் பொன்னாகும்!

By Asianet Tamil  |  First Published Jul 20, 2024, 10:45 AM IST

குருபகவான் இரண்டாம் வீடான ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். குருபகவான் புரட்டாசி மாதம் 23ஆம் தேதி முதல் ( அக்டோபர் 9) வக்ரமடைகிறார். குரு வக்ர பெயர்ச்சியாலும் குருவின் பார்வையாலும் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. தீபாவளிக்கு முன் திடீர் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகும் ராசிகாரர்கள் யார் என்று பார்க்கலாம். 


குரு பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெருகும். குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிகம்  ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரம் ராசியையும் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும். 

கடகம்:  குரு பகவான் லாப குருவாக பயணம் செய்கிறார்.  11வது வீடு சுப ஸ்தானம். தொட்டதெல்லாம் பொன்னாகும். நிறைய நன்மைகள் நடக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தன்னம்பிக்கை நீங்கும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைத்து, பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சசினைகள் தீரும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். அஷ்டமத்து சனி காலம் என்றாலும் குரு பகவான் அள்ளித்தரப்போகிறார். நன்மைகள் நடக்க சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் குருபகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

புதன் பெயர்ச்சி பலன் 2024: சிம்ம ராசிக்கு இடம் மாறும் புதன்; ஷேர் மார்க்கெட்டில் ஜாக்பாட் யாருக்கு?

கன்னி: குரு பகவான் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் நிறைய நன்மைகள் நடைபெறும். பதவியில் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களுக்கு மிகப்பெரிய நல்ல யோகமான பலன்களை பெறப்போகிறது. வேலையில் நல்ல மாற்றம் அதிர்ஷ்டம் நிகழும். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள்.

விருச்சிகம்: குரு பகவான்  7ஆம் இடம் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வது அதிக நன்மையை கொடுக்கும். திருமண பாக்கியம் கைகூடி  நல்ல பலன்கள் தரும். நேரடி குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து நேரடி பார்வையால் இருப்பதால் கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும். 

மகரம்: இந்த ஆண்டு குரு மிகப்பெரிய நன்மைகளை தரப்போகிறார். பூர்வ புண்ணியத்தில் குரு பயணம் செய்வதாலும் குருவின் அருள் பார்வை கிடைப்பதாலும் தொழில் விவயாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பதவியில் உயர்வு கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசனும்,  வெளிநாடு செல்லும் யோகமும் தரப்போகிறார் குருபகவான்.

Tap to resize

Latest Videos

ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2025: புது வேலை.. புது பிசினஸ் .. 2025ல் ஜெயிக்கப்போவது யாரு?

click me!