சூலம்.. பயணம் செய்தால் தடை வருமா.. எந்த கிழமையில் எந்த திசையில் பயணம் செய்யக்கூடாது? பரிகாரம் என்ன?

By Dhanalakshmi G  |  First Published Jul 19, 2024, 7:30 PM IST

எந்த நாளில் என்ன திசையில் பயணிக்கலாம் என்றும் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது அன்றாட காலாண்டரிலும் குறிப்பிடப்பட்டு இருக்கும். சூலம் இருக்கும்போது குறிப்பிடப்பட்ட திசையில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்றால் அதற்கான பரிகாரத்தையும் பார்க்கலாம். 


சூலம் என்றால் என்ன:
சூடு அதிகமாக இருக்கும் திசையை சூலம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நமது முன்னோர்கள் அந்த திசையில் பயணிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கோள்களையே வார நாட்களாக ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி என நாம் பெயர் வைத்திருக்கிறோம்.

எந்த திசை சூலம்:
ஒவ்வொரு கோளுக்கும் அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையாக இருக்கும். சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் மேற்கில் சூலம். சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள், சனியில் கிழக்கே சூலம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆடி வெள்ளி நாளில் வரும் சுக்கிரவார பிரதோஷம்; கடன் பிரச்சினை தீர்க்கும் பசும்பால் அபிஷேகம்!!

Latest Videos

undefined

யார் பார்க்க தேவையில்லை:
தினமும் வேலைக்காக செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டியதில்லை. நல்ல விஷயங்களுக்கு செல்பவர்கள் மட்டும் கிழக்கு திசைக்கு தயிர், மேற்கிற்கு வெல்லம், வடக்கிற்கு பசும்பால், தெற்கிற்கு நல்லெண்ணெய் சேர்த்த ஏதேனும் ஒரு உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்.

சூலம் யாருக்கு அவசியம்:  
கர்ப்பிணி பெண்கள் சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்பதனால் சூலம் பார்த்து பயணம் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். 

ஆங்கிலப்புத்தாண்டு ராசி பலன் 2025: புது வேலை.. புது பிசினஸ் .. 2025ல் ஜெயிக்கப்போவது யாரு?

click me!