இந்த குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடந்த ஓராண்டாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை கஷ்டப்படுத்தி இருப்பார். நிம்மதி இல்லாமலும், தூக்கம் இல்லாமலும் இருந்திருப்பீர்கள். ஆனால் தற்போது குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தடைகளும், தடுமாற்றங்களும் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள்.
பாதியில் நின்று போன வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். மகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும். மகனுக்கு வேலை கிடைக்கும். நோய்கள் தீரும். இளமை அழகு கூடும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் எல்லாம் மீண்டும் பணத்தை திருப்பி தருவார்கள். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தை வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தை வழி சொத்து சேரும்.
திடீர் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவீர்கள். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். வெளுத்ததை எல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் வந்து போகும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்த்து விடுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உயர்கல்வி, உத்தியோகத்திற்கு குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக நினைத்துக் கொள்ளலாம்.
தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம்.
சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். இழந்த மரியாதை, மதிப்பையும் மீண்டும் பெறுவீர்கள். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி திடீர் யோகங்களையும் செல்வ செழிப்பையும் அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித்தரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். நினைத்த காரியங்கள் கைகூடும்.