இந்த குரு பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.
கடந்த ஓராண்டாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பல விதங்களிலும் முடக்கி போட்டிருப்பார். ஆனால் தற்போது குரு 4-ம் வீட்டில் அமர்வதால் இனி ஓரளவு உங்களுக்கு நல்ல நடக்கும். உங்களுக்கு இருந்த தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். உங்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி உங்கள் பலத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம். பூர்வீக சொத்து பிரச்சனையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் பெயரில் உள்ள வாகனத்தை பயன்படுத்த வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேலை விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட கூடும். வயிற்று வலி, சிறுநீர் பாதை தொற்று, நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் ஏற்படும்.
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள், வேலை மாறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வரக்கூடும். பார்வைக் கோளாறு வரலாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் யாரும் தலையிட அனுமதிக்க வேண்டாம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். திடீரென அறிமுகமானவர்களை நம்பி, புதிய தொழில், புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
உத்தியோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் அங்கீகாரமும், பாராட்டுகளும் இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். சில மாதங்கள் கழித்து புதிய பொறுப்புகள் வரக்கூடும். இந்த குரு பெயர்ச்சி வேலைச்சுமை, பணப் பற்றாக்குறையை தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.
சென்னை – திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ வடிவுடை அம்மன் ஆலயம் முன்புள்ள ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்கினால் சுபிட்சம் உண்டாகும்.