பயத்தை போக்கி, எதிரிகளே இல்லாமல் செய்யும் பிரத்தியங்கிரா தேவியின் வரலாற்று பற்றி தெரியுமா?

Published : Nov 04, 2023, 06:04 PM IST
பயத்தை போக்கி, எதிரிகளே இல்லாமல் செய்யும் பிரத்தியங்கிரா தேவியின் வரலாற்று பற்றி தெரியுமா?

சுருக்கம்

சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்த போது அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர் தான் பிரத்தியங்கிரா தேவி.

சக்தியின் உக்கிர வடிவங்களில் பிரத்தியங்கிரா தேவி தோற்றமும் ஒன்று. சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்த போது அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர் தான் பிரத்தியங்கிரா தேவி. இந்த அன்னையை காலகண்டி, பைரவ மகிஷி என்ற பெயர்களும் உண்டு. ஒரு சில ஆலங்களில் பிரத்தியங்கிரா தேவியை நாம் பார்க்க முடியும். தனது பக்தனான பிரகலாதனை கொடுமைப்படுத்திய இரண்யகசிபுவை அழிக்க மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரம் எடுத்தார். அப்போது தன்னுடைய கூரிய நகங்களால் கொன்ற உடன், அவன் ரத்தத்தை குடித்தார்.

ஏனெனில் அவன் ரத்தம் விழுந்தால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் வெளிப்படுவான். எனவே நரசிம்மர் அவனின் ரத்தத்தை குடித்தார். ஆனால் அரக்கனின் ரத்தம் அவரின் உடலுக்குள் சென்றதால் நரசிம்மரின் உக்கிரம் மேலும் அதிகரித்தது. கண்ணில் படும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்த தொடங்கினார்.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் ஒட்டுமொத்த உலகத்திற்கே ஆபத்து வரலாம் என்று எண்ணிய தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். உடனே பறவை, மிருகம், பூதம் ஆகியவை சேர்ந்த கலவையாக பயங்கரமான சரபம் எனும் வடிவம் எடுத்தார். சிவபெருமானின் இந்த வடிவத்தை சரபேஸ்வரர் என்று வழிபடுகிறோம்

சரப வடிவம் எடுத்த சிவபெருமான் நரசிம்மரை தடுத்து நிறுத்தினார். இதனால் மேலும் கோபமான நரசிம்மர், ‘ கண்ட பேருண்டம்’ என்ற சக்தியை வெளிப்படுத்தினார். அந்த சக்தி, சரப பறவைக்கு எதிரியாகும். எனவே சரபேஸ்வரர் தனது கண்ணில் இருந்து பிரத்தியங்கிரா தேவியை தோற்றுவித்தார். ஆயிரம் சிங்க முகம், இரண்டாயிரம் கண்கள், இரண்டாயிரம் கைகள், புலியின் நகங்கள் யானையை விட 10 மடங்கு பெரிய உருவம் என அந்த தேவி காட்சி தந்தார்

பின்னர் அந்த தேவி நரசிம்ம வெளிப்படுத்திய கண்ட பேருண்டம் சக்தியை தனது வாய்க்குள் போட்டு விழுங்கினார். இதனால் நரசிம்மர் சாந்தமாக மாறினார். எனினும் பிரத்தியங்கிரா தேவியின் அந்த பிரம்மாண்ட வடிவத்தை பக்தர்கள் வழிபட முடியாது என்பதால் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சிங்க முகம், மனித உடல், 8 கரங்களுடன் கூடிய வடிவத்திற்கு அன்னை மாறினார்.

கோயில்களில் இந்த பிரத்தியங்கிரா தேவியின் உருவத்தை பார்த்தால் உக்கிரமாக இருந்தாலும், அவரின் வாய்ப் பகுதியில் மட்டும் லேசான புன்னகை இழையோடுவதை காணலாம். 4 சிங்கங்கள் கொண்ட பூட்டிய தேரை வாகனமாக கொண்ட இந்த அன்னையை வழிபாடு செய்தால் எந்த விதத்தில் பயம் ஏற்பட்டாலும், அந்த பய உணர்வு அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

கஷ்டங்களை நீக்கும் வெற்றிலை பரிகாரம்.. எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பிரித்தியங்கிரா தேவிக்கு கோயில்களும், சன்னதிகளும் உள்ளன. கும்பகோணம் அருகே அய்யவாடி என்ற இடத்தில் பிரத்தியங்கிரா தேவிக்கு கோயில் உள்ளது. அதே போல் தூத்துக்குடியிலும் பிரத்தியங்கிரா தேவிக்கு தனிக்கோயில் உள்ளது. சென்னை சோளிங்கநல்லூர், செங்கல்ப்பாடு சிங்கப்பெருமாள் கோயில் அருகே வெண்பாக்கம் கிராம மலையடிவாரம், சீர்காழி அருகே வரிசைபத்து, வேலூர் மாவட்டம் பள்ளூர், கன்னியாகுமரி மாவட்டம் ஊழிக்கோடு ஆகிய இடங்களில் பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைந்துள்ளது. 

ஓசுரில் உள்ள பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் அந்த தேவியின் பிரம்மாண்ட உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பிரித்தியங்கிரா தேவியை மனதார வழிபாட்டால், வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும், தடைகளையும் போக்கி எதிர்ப்புகள் இல்லாமல் செய்து, எதிரிகளையும் பலமிழக்க செய்வாள் பிரத்தியங்கிரா தேவி..

PREV
click me!

Recommended Stories

Thulam Rasi Palan Dec 13: துலாம் ராசி நேயர்களே, இன்று வாயில் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Viruchiga Rasi Palan Dec 13: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும்.!