சனி வக்ர நிவர்த்தி 2023 : இன்று முதல் இந்த ராசிகளுக்கு குபேர யோகம்.. இனி எல்லாமே வெற்றி தான்..!

By Asianet Tamil  |  First Published Nov 4, 2023, 8:36 AM IST

சனியின் இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று விரிவாக பார்க்கலாம்.


9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் சனி பகவான் மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நற்பலன்களையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த வகையில் கடந்த ஜூன் 17-ம் தேதி கும்பராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 4) வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே சனியின் இந்த வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று விரிவாக பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேஷம் :

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேராக பயணம் செய்வதால் உங்களுக்கு இனி நல்ல காலம் தான். நீங்கள் மிகப்பெரிய உயர்த்தை தொடப் போகிறீர்கள். குறிப்பாக தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். வேலையிலும் பதவி உயர்வு கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். குழந்தை பேறு கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தொடர்ந்து தடைபட்டு வந்த காரியங்கள் எளிதாக நடைபெறும். இந்த காலக்கட்டத்தி உங்களுக்கு எங்கும் வெற்றி, எதிலும் கிடைக்கும்.

ரிஷபம்

சனியின் வக்ர நிவர்த்தியால் ரிஷப ராசிக்காரர்கள் மிகப்பெரிய வெற்றி அடைவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேங்கிக்கிடந்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த காரியங்கள் நடைபெறும். வேலையில் இரட்டிப்பு லாபம் பதவி உயர்வு கிடைக்கப்போகிறது. சிலருக்கு சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், மன நிறைவும் இருக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. உங்களுக்கு இது மிகவும் யோகமான காலக்கட்டம். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த காலக்கட்டத்தில் நிதி மற்றும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், திருப்திகரமான பண வரவு இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த வீடு மனை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு கட்டி குடி போகலாம். இந்த காலக்கட்டத்தில் மனம் தெளிவாக இருக்கும். சிந்தனை ஆற்றல் பெருகும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். 

துலாம் :

சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்கள்கரமானதாக கருதப்படுகிறது. எனவே நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்ததிருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பண ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்த வெற்றியை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த சூழல் இருக்கும்.

நவம்பர் மாத ராசி பலன்கள்.. எந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.? எந்த ராசிகளுக்கு சிக்கல்?

தனுசு :

சனி வக்ர நிவர்த்தியால் உங்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. மன குழப்பம் நீங்கி, நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும்.உங்க காட்டில்  இனி பண மழை பொழியப்போகிறது. வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் வெற்றி பெறும் பொன்னான காலம் இது.

கும்பம் :

சனியின் வக்ர நிவர்த்தி காலத்தில் சனிபகவான் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நற்பலன்களையே வழங்குவார். நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையும் போது கும்ப ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடரும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.தொழில் முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். புதிய சொத்துக்கள் வண்டி வாகனங்கள் வாங்கலாம். 

click me!