எதுக்குமே கஷ்டம் இருக்காது.. எப்பவுமே ராஜ வாழ்க்கை வாழும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள் தான்..

By Ramya s  |  First Published Aug 30, 2023, 1:34 PM IST

ராஜயோகம் இருந்தால் பணம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி என எல்லாமே இவர்களுக்கு இருக்கும். 


ஜோதிடத்தில் ராஜயோகம் என்பது ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. கிரகங்களின் சேர்க்கைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் செழிப்பு, வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருகின்றன. அந்த வகையில் ராஜ யோகம் என்பது  ஒரு நபரை ராஜா மற்றும் ராணியின் அந்தஸ்துக்கு உயர்த்தும். அதாவது அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. சிறப்பான வளமான வாழ்வை அவர்கள் வாழ்வார்கள். அவர்கள் எதற்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை. எந்த காரியத்தில் இறங்கினாலும் கஷ்டப்படாமலே வெற்றி கிடைக்கும், மேலும் அவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடைகிறார்கள். பொருளாதார முன்னேற்றத்திலும் எந்த தடையும் இருக்காது. பணம், செல்வாக்கு, அந்தஸ்து, பதவி என எல்லாமே இவர்களுக்கு இருக்கும். மேலும் இவர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்வார்கள்.

அந்த வகையில் ராஜயோகம் காரணமாக ராஜா போல் வாழும் நட்சத்திரக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அவர்கள் இருக்கும் துறையில் கோலோச்சி வருவார்கள். அப்படி தங்கள் துறையில் உச்சத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்தால், 7 நட்சத்திரங்கள் முதல் தர ராஜயோகத்தில் உள்ளன.

Tap to resize

Latest Videos

உங்கள் வீட்டில் ஒருபோதும் இந்த 5 பொருட்களை காலியாக வைக்காதீங்க.. எதிர்மறை ஆற்றல் அதிகரிக்குமாம்

எனினும் சில நட்சத்திரங்களுக்கு இது பலனளிக்கவில்லை எனில் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவான நிலையில் இல்லை என்று அர்த்தம். அதே நேரம், ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவான நிலையில் இருந்து, தசாபுத்தி நடந்தால் அவர்களுக்கு ராஜ யோகத்தின் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சரி, முதல் தர ராஜ யோக நட்சத்திரங்கள் என்று பார்க்கலாம்.

முதல் தர ராஜயோக நட்சத்திரங்கள்

  • மிருகசிரீடம்
  • பூசம்
  • பூரம்
  • உத்திரம்
  • அனுஷம் 
  • மூலம்
  • திருவோணம்

2-ம் தர ராஜ யோக நட்சத்திரங்கள்

  • ரோஹிணி
  • திருவாதிரை
  • புணர்பூசம்
  • ஆயில்யம்
  • மகம்
  • சுவாதி
  • உத்தரட்டாதி
  • ரேவதி

மேற்கூறிய 15 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராஜயோகம் பெற்றவர்கள் எனவும், அவர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள் என்றும் ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

click me!