Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

Published : Jul 13, 2024, 11:22 AM IST
Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

சுருக்கம்

கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடி மாதத்திற்கு கடக மாதம் என்று பெயர்.  ஆடியில் திருமணம் செய்யலாமா என்றும் புது வீடு பால் காய்ச்சி கிரகப்பிரவேசம் செய்யலாமா என்றும் ஒருசிலர் கேட்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆடி மாதம் பிறக்கப்போவதால் கோவில்கள் இப்போதே திருவிழாவிற்கு தயாராகி வருகின்றன. ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

ஆடி மாத சிறப்புகள்:
தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் இணையும் மாதம் ஆடி மாதம். சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன். சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். ஆன்மிக ரீதியாக நோக்கினால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் பெண் என்கிற சக்தி ஆடி மாதத்தில் மிகவும் மகத்துவம் பெறுகிறாள்.

ஆன்மீக வழிபாடு:
ஆடி, புரட்டாசி, மார்கழி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். கோவில்களில் விழாக்கள் களைகட்டும். அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம். புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதம், நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும். மார்கழி மாதம் தனுர் மாதம் வழிபாட்டிற்கு உரிய மாதங்களாக கூறப்பட்டுள்ளது.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

விவசாயம் செழிக்க மழை:
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி' ஆடி மாதத்தில் உழவுப்பணிகளை மேற்கொள்கின்றனர். விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை. ஆடியில சேதி மட்டும் சொல்லி விட்டு அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர்.

தாய் வீடு செல்லும் பெண்கள்:
புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் வீட்டிற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும். மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர்.

சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி யாரை பாதிக்கும்? என்ன செய்யும்? பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம்?

இறைவனோடு இணைந்த இறைவி:
ஆடி மாதத்தில்தான் அம்மனே தவமாய் தவமிருந்து இறைவனோடு இணைந்தார். இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல என்றும் காலமெல்லாம் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது.

வாஸ்து செய்யும் நாள்:  
ஆடி மாதத்தில் நிலம் வாங்க அட்வான்ஸ் தரலாம். புது வீடு பார்த்து வாங்குவதற்கு அட்வான்ஸ் தரலாம் என்றும் கூறுகின்றனர். ஆடி மாதத்தில் வாஸ்து நாளில் புது வீடு பால் காய்ச்சலாம். அதே போல ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நிலம் சம்பந்தப்பட்ட காரியங்களை செய்யலாம். இன்றைய கால கட்டத்தில் ஆடி மாதத்தில் சிலர் வீடு பால் காய்ச்சுகின்றனர். திடீரென வேலையில் இடமாற்றம் கிடைத்தவர்கள் வேறு வழியில்லை என்பதால் ஆடி பெருக்கு நாளில் புது வீட்டிற்கு பால் காய்ச்சுகின்றனர். காரணம் இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வதால் வீடு பால் காய்ச்சுவதில் தவறில்லை என்கின்றனர்.

என்ன செய்யக்கூடாது:  
புது வீடு கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் வைத்துக்கொள்ளலாம். லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்பது ஜோதிட விதி. அதே நேரத்தில் அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது.  சந்திராஷ்டமம், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக்கூடாது. வீடு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!
Viruchiga Rasi Palan Dec 06: விருச்சிக ராசி நேயர்களே, புதன் பெயர்ச்சியால் இன்று பண மழை கொட்டப்போகுது.!