சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி யாரை பாதிக்கும்? என்ன செய்யும்? பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம்?

By Asianet Tamil  |  First Published Jul 13, 2024, 9:30 AM IST

எதை தொட்டாலும் சிலருக்கு கெட்டதாகவே நடக்கும் என்னப்பா எனக்கு ஏழரை எதுவும் நடக்குதோ என்று தனக்கு தானே கேட்டுக்கொள்வார்கள். சனிபகவான் ஒருவரை ஏழரை ஆண்டு காலம் பாடாய் படுத்தி எடுத்து விடுவார். அதனால்தான் பலருக்கும் ஏழரை சனி காலம் வந்தாலே ஒருவித பயத்தோடும் பதற்றத்தோடும் இருப்பார்கள். ஏழரை சனி காலத்தில் என்ன பாதிப்பு வரும்? ஏழரை சனி என்றால் என்ன? என்ன பரிகாரம் செய்தால் தப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.


சனி பகவான் பயணம்:
நவ கிரகங்களில் சனி பகவான் ஒருவரின் ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். இந்த கால கட்டத்தில் 4 மாத காலம் வக்ர நிலையிலும் சில நேரங்களில் அதிசாரமாகவும் செல்வார் சனி பகவான். சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார்.  சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. ஏழரை சனியில் சிக்கி தவிப்பவர்கள் பாடுதான் பெரும் பாடாக இருக்கிறது.

சனியால் எப்போது சங்கடம்:
சனி பகவான் ஒரு ராசிக்கு 12ஆம் வீட்டிலும், ஜென்ம ராசியிலும், ராசிக்கு 2ஆம் வீட்டிலும் பயணம் செய்யும் போது ஏழரை சனியாக பயணம் செய்வார். ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது அஷ்டம சனியாகவும் ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது கண்டச்சனியாகவும், நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பயணம் செய்வார். இந்த காலத்தில் சில சங்கடங்களையும் அதன் மூலம் அந்த ராசிக்காரர்களுக்கு படிப்பினைகளையும் கொடுப்பார் சனிபகவான்.

Tap to resize

Latest Videos

undefined

லட்சுமி தேவி வீட்டில் தங்க வேண்டுமா..? அப்ப 'இந்த' வாஸ்து விதிகளை பாலோ பண்ணுங்க..

ஏழரை சனி யாருக்கு?:  
கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும் பயணம் செய்கிறார். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும்.

ஏழரை சனியில் என்ன செய்யக்கூடாது:
ஏழரை சனி காலத்தில் நாம் பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பண வருமானத்தில் பிரச்சினை வந்தாலே குடும்பத்தில் பிரச்சினை வரும். அதுவே மன அழுத்தத்தையும் நிம்மதியின்மையையும் ஏற்படுத்தி விடும். எனவே ஏழரை சனி காலத்தில் பண விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அகலக்கால் வைக்கக் கூடாது. தேவையில்லாத விசயங்களில் தலையிடக்கூடாது. நள மகராஜா சூதாட்டத்தில் நாடு, நகரம், மனைவி மக்கள் இழந்து உருவம் மாறி மறைவாக வாழ்ந்த வாழ்க்கை ஏழரை சனி காலத்தில்தான் என்பதை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்.

செவ்வாய் பெயர்ச்சி 2024: ரிஷப ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் செவ்வாய்.. குரு மங்கல யோகம் யாருக்கு?

ஏழரை சனிக்கு பரிகாரம்:
ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை நாளில் சனி ஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். எள் தயிர் கலந்த சாதத்தை சனிக்கிழமை நாளில் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது. நீல நிற சங்கு பூக்களும் வன்னி மர இலை, வில்வ இலை மாலை கட்டி சனிபகவானை வணங்கலாம். பச்சரியை பொடி செய்து அதில் சர்க்கரை சேர்த்து அரச மரத்தடியில் விநாயகருக்கு கீழே உள்ள புற்றில் வசிக்கும் எறும்புகளுக்கு உணவாக போடலாம். ஏழரை சனி காலத்தில் அனுமனையும் விநாயகரையும் வணங்குவது சிறப்பு. நள சரித்திரம் படிக்கலாம் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

click me!