Sukra Dasa: 20 வருடங்கள் கோடீஸ்வர யோகம் தரும் சுக்கிரன், யாருக்கு காதல் மணியடிக்கும்?

By Asianet Tamil  |  First Published Jul 12, 2024, 3:28 PM IST

சுக்கிர திசை என்பது மொத்தம் 20 வருடங்கள். ஒருவருக்கு சுக்கிரதிசை காலத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்  என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. திடீர் பணக்காரர்களைப் பார்த்து சுக்கிர திசை வந்து விட்டதா என்று கேட்பார்கள். வெள்ளிக்கிழமையான இன்று சுக்கிர திசையில் யாருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும் பாதிப்பு வந்தால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.


நவ கிரகங்களில் சுக்கிரன்:  
அசுர குரு சுக்கிரன். நவ கிரகங்களில் சுக்கிரன் சுப கிரகம். காதல் நாயகன் களத்திர காரகன். காதலுக்கும் ஆசைக்கும் சொந்தக்காரன். இல்லற வாழ்க்கையில் சுகத்தையும் சந்தோஷத்தையும் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையாக இருந்தால் சுக்கிர திசை காலத்தில் யோகங்கள் வரும். கோடி கோடியாக அள்ளித்தருவார் சுக்கிரன்.

கோடீஸ்வர யோகம்:  
ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் பண வரவுகளுக்கும்  பஞ்சாமிருக்காது. கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு. நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்ற யாவும் அமையும்.

Tap to resize

Latest Videos

undefined

செவ்வாய் பெயர்ச்சி 2024: ரிஷப ராசியில் குரு உடன் கூட்டணி சேரும் செவ்வாய்.. குரு மங்கல யோகம் யாருக்கு?

சுக்கிரதிசை:
குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும் என்றால் குழந்தைப் பருவத்தில் வரும் சுக்கிர திசை ஆகாது. பயன் தராது என்று பெரும்பாலான ஜோதிடர்கள் சொல்கிறார்கள். பரணி-பூரம்-பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம திசையே சுக்கிர திசையாக வரும்.  அசுவினி-மகம்-மூலம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இரண்டாவது  திசையாக சுக்கிர திசை வரும் இதனால் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த குடும்பத்துக்கு பாதிப்பு வரும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

காதல் திருமணம்:
அசுவினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் இள வயதிலேயே சுக்கிர திசை வரும். இளம் பருவத்தில் வரும் சுக்கிர தசை மற்றும் புக்தி காலத்தில்  மனதில் காதல் மணியடிக்க வைப்பார் சுக்கிரன். இளம் வயது திருமணத்தையும் நடத்தி வைப்பார் சுக்கிரன்.

பாதிப்பு யாருக்கு:
சுக்கிரன் தனித்து நிற்காமல் பாவ கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அது போல சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை ரீதியாக பிரச்சனைகளை உண்டாகும். பொருளாதார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும். கண்களில் நோய் தவறான பெண்களின் சேர்க்கையால் பாலியல் நோய்களுக்கு ஆளாக கூடிய நிலை, மர்ம உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை வியாதி, போன்றவை ஏற்படும்.

சனி பெயர்ச்சி பலன் 2024: கும்ப ராசியில் ஆட்சி பெற்ற சனியின் பார்வை யாருக்கெல்லாம் பாதிப்பு?

உடல் நலம் பாதிப்பு:
ஜாதகத்தில்  சுக்கிரன் பலமிழந்து குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் அடிக்கடி உடல் நிலை பாதிப்பு பெற்றோருக்கு அனுகூவமற்ற நிலை உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் ரகசிய உடல் நிலை பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்களால் ஆரோக்கிய பாதிப்பு குடும்பத்தில் பொருளாதார பிரச்சினை, சர்க்கரை நோய்கள், ரகசிய நோய்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.

நீசபங்க ராஜயோகம்:  
பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார்.  ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.

பரிகாரம் என்ன:
சுக்கிர திசை சுக்கிர புத்தி நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும். சுக்கிர திசை நடக்கும் காலத்தில் வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு விரதம் இருக்கலாம். மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது நன்மை தரும்.  ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரையும் தாயாரையும் வணங்க சுக்கிர திசை நடைபெறும் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
 

click me!