
ஜோதிட சாஸ்திரப்படி, சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் தேடி வருவதற்கு அவர்கள் தான் முக்கிய காரணமாக இருப்பார்கள். இவர்களின் வெளிப்படையான பேச்சே சில சமயங்களில் இவர்களை பல சிக்கல்களில் மாட்டி விட்டு விடும். நேர்மறையாக, உண்மையாக இருக்கிறேன் என்ற பெயரில் மனதில் பட்டதை கொஞ்சமும் யோசிக்காமல் வெளியில் கொட்டி விடுவதால் பலரின் பகையை சம்பாதிப்பதுடன், மற்றவர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு, கடைசியில் மனம் புண்படுத்தப்படுபவர்களும் இவர்களாக தான் இருப்பார்கள். தன்னுடைய வாயாலேயே பல பிரச்சனைகளில் வழிய போய் சிக்கிக் கொள்ளும் 7 ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா என தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் :
எதையும் யோசிக்காமல் பேசும் தன்மை கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். அப்படி இவர்கள் பேசும் சில வார்த்தைகள் மற்றவர்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதுடன், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். நேர்மையாக பேசுவதாக நினைத்து இவர்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு தீங்குகளை ஏற்படுத்தி விடும். இதனால் மற்றவர்களின் பகையையும், வெறுப்பையும் எளிதில் சம்பாதித்து கொள்வார்கள். அதனால் தங்களின் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். தலைமைத்துவத்துடன் பக்குவமான பேச்சுக்களை கடைபிடிப்பது இவர்களின் கெளரவத்தை உயர்த்தும்.
மிதுனம் :
சாதுர்யமான பேச்சு, புத்திசாலித்தனம், எதையும் விரைவாக புரிந்து கொள்ளும் ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்கள் மிதுன ராசிக்காரர்கள். ஆனால் ஆர்வக் கோளாறு காரணமாகவும், தனக்கு தெரிந்த அதிகமான விஷயங்களை மற்றர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் எதை, எந்த இடத்தில், யாரிடம் சொல்லுவது என தெரியாமல் உளறிக் கொட்டி வம்பில் மாட்டிக் கொள்வார்கள். இவர்கள் சொல்லும் சில விஷயங்கள், வதந்திகளாகவும் மாறி அதனால் இவர்களுக்கு சிக்கலும் ஏற்படுவது உண்டு. அதனால் மிதுனம் ராசிக்காரர்கள் எப்போதும் வார்த்தைகளை கவனமுடன் பகிர கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் சுற்றி இருப்பவர்களுடன் நல்ல உறவையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
சிம்மம் :
தன்னம்பிக்கையும், பேச்சில் வல்லமையும் பெற்றவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாக மனதில் பட்டதை பேசக் கூடியவர்கள். இருந்தாலும் பெருமை, ஈகோ காரணமாக இவர்கள் பேசும் வார்த்தைகள் வீண் வம்புகளை பெற செய்து விடும். தங்களின் பெருமையை பேச வேண்டும் என நினைத்து இவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றவர்களிடம் தவறான புரிதலையும், மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடும். சிம்ம ராசிக்காரர்கள் பேச்சில் அடக்கத்தை பின்பற்ற வேண்டும். மற்றவர்களை ஊக்குவிக்கும் பேசக் கற்றுக் கொண்டால் இவர்களின் தலைமை பண்புகள் மற்றவர்களால் மதிக்கப்படும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள எளிதில் உணர்சிவசப்படக் கூடியவர்கள்.சில சமயங்களில் அவர்களின் வருத்தங்களை சொல்லுவது கூட மற்றவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி விடும். ஒருவரின் குறைகளை நேரம் பார்த்து, பழிவாங்குவதை போல் சொல்லிக் காட்டுவதால் பல நேரங்களில் மிகப் பெரிய பகையை ஏற்படுத்தி விடும். இதனால் மற்றவர்களிடம் வார்த்தைகளை பயன்படுத்தும் போது விருச்சிக ராசிக்காரர்கள் சரியான பொறுமையாக கையாண்டால் பல பெரிய விஷயங்களை சாதிக்க முடியும்.
தனுசு :
உண்மை, நேர்மை ஆகியவற்றை விரும்பக் கூடியவர்கள் தனுசு ராசிக்காரர்கள். இதனால் சில சமயங்களில் யோசிக்காமல் மனதில் பட்டதை பேசி விடுவார்கள். நியாயத்தை பேசிவதாக இவர்கள் பேசும் வார்த்தைகளால் பல நேரம் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். சில நேரம் சுற்றி உள்ளவர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இதனால் இவர்களிடம் பேசுவதையே மற்றவர்கள் தவிர்க்கும் நிலைமை கூட ஏற்பட்டு விடும். இதனால் சாதுர்யமாக பேச தனுசு ராசிக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். தங்களின் வார்த்தைகளை நியாயப்படுத்த நினைப்பதை விட மற்றவர்களின் நம்பிக்கையை அதிகரித்து, அவர்களின் ஆதரவை பெறும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவது நல்லது.
மகரம் :
மகர ராசிக்காரர்கள் லட்சியவாதிகள். கொள்கை பிடிப்பில் தளராதவர்கள். உறவுகளை விட தங்களின் லட்சியத்திற்கே முன்னுரிமை கொடுக்கும் இவர்களின் மிகைப்படுத்திய மற்றவர்கள் பற்றிய விமர்சனங்கள், கடுமையான வார்த்தைகள் மற்றவர்கள் மனதை புண்படுத்தி விடும். இதனால் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதித்து கொள்வார்கள். லட்சிய பிடிப்புடன் மற்றவர்கள் மீதான கரிசனத்தையும் இவர்கள் காட்டினால் பெரிய காரியங்களைக் கூட எளிதில் சாதிக்க முடியும்.
கும்பம் :
சுதந்திரமாக செயல்பட வேண்டும் என நினைப்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வித்தியாசமாக செயல்பட நினைக்கும் இயல்பு கொண்ட இவர்கள் பின் விளைவுகளை யோசிக்காமல் சில விஷயங்களை மனம் விட்டு பேசி விடுவார்கள். இதனால் மற்றவர்களுடன் இவர்களுக்கு இணக்கமான உறவு இல்லாமல் போகும். மற்றவர்களின் கோபம், எரிச்சலை சம்பாதித்து கொள்வார்கள். எதையும் யோசித்து நிதானமாக, மற்றவர்களின் தவறுகளைக் கூட அமைதியான முறையில் எடுத்துச் செல்வதால் மற்றவர்களின் நன்மதிப்பை பெற முடியும்.