- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: கேப்டன் விஜயகாந்த் மறைவு.. கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்..!
Tamil News Live Updates: கேப்டன் விஜயகாந்த் மறைவு.. கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்..!

கொரோனா பாதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் மலரஞ்சலி!!
விஜயகாந்த் உடலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி!!
தனது தலைவனின் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழும் தொண்டர்கள்!!

விஜயகாந்துக்கு நடிகை ராதிகா இரங்கல்!!
விஜயகாந்துக்கு நடிகர் தனுஷ் இரங்கல்!!
அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை!!
கேப்டனுக்கு மெரினா பீச்சுல இடம் கொடுக்கனும்! விஜயகாந்த் ரசிகர்கள் வைத்த கோரிக்கை... ஏற்குமா அரசு?
சென்னை மெரினா கடற்கரையில் கேப்டன் விஜயகாந்த்-துக்கு இடம் ஒதுக்கீடு செய்யக்கோரி அவரது ரசிகர்கள் அரசுக்கு கோரிக்கை முன்வைத்து உள்ளனர்.
விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

விஜயகாந்த் வீடு முன்பு கதறி அழும் தொண்டர்கள்!!

விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்த மன்சூர் அலிகான்!!

கண்ணீர் கடலில் தொண்டர்கள்!!

விஜயகாந்த் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!!
கலையுலகம் - அரசியல், இரண்டிலும் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பணிகள் காலத்தால் அழியாதவை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு விஜயகாந்த் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுத மகன்கள்
விஜயகாந்த் மரணமடைந்த நிலையில் அவரின் உடலைப் பார்த்து அவரது மகன்கள் கதறி அழுத புகைப்படம் காண்போரை கலங்கச் செய்துள்ளது.
திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்த் டாப் 15 டக்கரான திரைப்படங்கள் - லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
வாகன போக்குவரத்து மாற்றம்!!
வாகன போக்குவரத்து மாற்றம்!!
விஜயகாந்த மறைவு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது... எல்.முருகன்
தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர். அவரை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
தமிழ்த்திரைத்துறையிலும் அரசியலிலும் விஜயகாந்த் சாதனைகள் காலத்தால் அழியாதவை.. வேதனையோடு சீமான் புகழாரம்!
தான் நடிக்கும் படப்பிடிப்பு தளமானாலும், தமது அலுவலகமானாலும் பசியோடு யாரும் இருந்திடக்கூடாது என்று தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி விஜயகாந்த் என சீமான் கூறியுள்ளார்.
வாகன போக்குவரத்து மாற்றம்!!
கோயம்பேட்டில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவு.. ஓபிஎஸ் வேதனையுடன் இரங்கல்
அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர் கேப்டன்.. ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர், நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.