comscore

Tamil News Live Updates: 663 நாள் கழித்து பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைப்பு

Breaking Tamil News Live Updates on 14 March 2024

மத்திய அரசு 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

10:56 PM IST

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மத்திய அரசு 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

663 நாள்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

10:53 PM IST

தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பதைக் கண்டறிய வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SBI Electoral Bond Data: எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை; தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு!!

6:19 PM IST

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமல்ல? தமிழக அரசு விளக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமல்ல என்று பரவும் தகவல் குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

5:33 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அளித்துள்ள பரிந்துரைகள்!

ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வெளியாகியுள்ளது.
 
4:57 PM IST

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து தேர்வு: அதிர் ரஞ்சன் சவுத்ரி!

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்

4:12 PM IST

தாமரையே விடை: மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜக போஸ்டர்!

மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜகவினர் தாமரையே விடை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்

3:49 PM IST

போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு வழக்கு: முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை காட்டம்!

போதைப்பொருள் விவகாரத்தில் தனது மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

3:05 PM IST

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திமுக எம்.பி. இல்லாத மக்களவை தொகுதி எது தெரியுமா?

தமிழ்நாட்டின் ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அந்த தொகுதி எது தெரியுமா

2:33 PM IST

இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் எவை? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

பாலினம், இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து சம்பளத்தின் விகிதாச்சாரம் மாறுபடுகிறது. அந்த வகையில், இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் குறித்து தெரியவந்துள்ளது

12:57 PM IST

இந்தியாவில் அதிரடியாக 18 ஓடிடி தளங்களுக்கு தடைவிதித்தது மத்திய அரசு - அதன் லிஸ்ட் இதோ

எல்லைமீறிய ஆபாச காட்சிகளுடன் கூடிய படங்களை வெளியிட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:51 PM IST

கோவை மக்களவை தொகுதி: வெற்றி யாருக்கு? அரசியல் கட்சிகளின் கணக்கு என்ன?

கோவை மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அரசியல் கட்சிகளின் கணக்கு என்னவாக இருக்கிறது?
 
12:03 PM IST

சென்னையில் நாளை முதல் ஓராண்டுக்கு இந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் நாளை முதல் ஓராண்டு காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

12:03 PM IST

தமிழகத்தில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு! எப்போது விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

11:33 AM IST

எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்திலும்,  பம்மல் மற்றும் பல்லாவரத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

11:32 AM IST

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது: உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

10:59 AM IST

ஒரே நாடு, ஒரே தேர்தல்: குடியரசுத் தலைவரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிப்பு!

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது

10:18 AM IST

நான் அமைச்சராக மட்டும் இல்லைனா பீஸ் பீஸாக ஆக்கிவிடுவேன்! பிரதமருக்கு கொலை மிரட்டல் தாமோ அன்பரசனுக்கு சிக்கல்!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்  விடுத்த தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

9:39 AM IST

டப்பிங் யூனியனில் சந்தா கட்டாத விஜய் மீது எடுக்காத ஆக்‌ஷனை சின்மயி மீது மட்டும் எடுத்தது ஏன்? ராதாரவி விளக்கம்

டப்பிங் யூனியனில் தலைவராக இருக்கும் ராதா ரவி, தன் மீது சின்மயி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக பதிலளித்து பேசி இருக்கிறார்.

9:08 AM IST

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளீர்களா? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி..!

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

9:08 AM IST

முதல்வர் எழுதிய கடிதம்.. உடனே டெல்லி பறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்.!

பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்குமாறும் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டார்.  

9:07 AM IST

விடுதலை நான் நடிக்க வேண்டிய படம்... வெற்றிமாறன் கெஞ்சி கேட்டும் நடிக்க மறுத்தது ஏன்? - சீமான் விளக்கம்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக சீமான் கூறி இருக்கிறார்.

7:33 AM IST

சென்னையில் 663வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 663வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:33 AM IST

பொன்முடி அமைச்சராவதில் தாமதம்.. டெல்லி புறப்பட்டார் ஆளுநர்..!

பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்குமாறும் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று காலை ஆளுநர் டெல்லி புறப்பட்டார்.  3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட ஆளுநர் வரும் 16ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

7:32 AM IST

அதிமுக-வை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டீர்களே? இதுதான் மெகா கூட்டணியா இபிஎஸ்.. கே.சி. பழனிசாமி விளாசல்!

 எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பொதுக்கூட்டத்தில் மெகா கூட்டணி அமைப்பேன் என்று  முழக்கமிட்டது இதற்கு தானா? என கே.சி.பழனிசாமி காட்டாக கேள்வி எழுப்பியுள்ளார். 

7:32 AM IST

Chitirai Festival 2024: மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படும் என கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

10:56 PM IST:

மத்திய அரசு 663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. நள்ளிரவு முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

663 நாள்களுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

10:53 PM IST:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சர்ப்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்பதைக் கண்டறிய வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SBI Electoral Bond Data: எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை; தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு!!

6:19 PM IST:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயமல்ல என்று பரவும் தகவல் குறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது

5:33 PM IST:

ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைகள் வெளியாகியுள்ளது.
 
4:57 PM IST:

புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்

4:12 PM IST:

மோடி சுட்ட வடைக்கு எதிராக பாஜகவினர் தாமரையே விடை என்ற பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர்

3:49 PM IST:

போதைப்பொருள் விவகாரத்தில் தனது மீது அவதூறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

3:05 PM IST:

தமிழ்நாட்டின் ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. அந்த தொகுதி எது தெரியுமா

2:33 PM IST:

பாலினம், இடம், கல்வி மற்றும் அனுபவம் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து சம்பளத்தின் விகிதாச்சாரம் மாறுபடுகிறது. அந்த வகையில், இந்தியாவில் அதிக சம்பளம் தரும் மாநிலங்கள் குறித்து தெரியவந்துள்ளது

12:57 PM IST:

எல்லைமீறிய ஆபாச காட்சிகளுடன் கூடிய படங்களை வெளியிட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:51 PM IST:

கோவை மக்களவை தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு கிடைக்கும்? அரசியல் கட்சிகளின் கணக்கு என்னவாக இருக்கிறது?
 
12:03 PM IST:

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு ஒயிட்ஸ் சாலையில் நாளை முதல் ஓராண்டு காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

12:03 PM IST:

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

11:33 AM IST:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணி இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி. கொரியர் அலுவலகத்திலும்,  பம்மல் மற்றும் பல்லாவரத்தில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது.

11:32 AM IST:

சிஏஏ சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

10:59 AM IST:

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது

10:18 AM IST:

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்  விடுத்த தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

9:39 AM IST:

டப்பிங் யூனியனில் தலைவராக இருக்கும் ராதா ரவி, தன் மீது சின்மயி சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு முதன்முறையாக பதிலளித்து பேசி இருக்கிறார்.

9:08 AM IST:

இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 20ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

9:08 AM IST:

பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்குமாறும் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டார்.  

9:07 AM IST:

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன விடுதலை படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணியதாக சீமான் கூறி இருக்கிறார்.

7:33 AM IST:

சென்னையில் 663வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:33 AM IST:

பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்குமாறும் பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் இன்று காலை ஆளுநர் டெல்லி புறப்பட்டார்.  3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்ட ஆளுநர் வரும் 16ம் தேதி சென்னை திரும்ப உள்ளார்.

7:32 AM IST: