குடிக்க தண்ணி இல்ல, சாப்பாடு இல்ல..!! ஆனால் அந்த ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டும் ஆப்ரிக்க நாடு..!!

By Ezhilarasan Babu  |  First Published Apr 13, 2020, 10:25 AM IST

இந்நிலையில் பல நாட்களாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருக்கும் நிலையில் எங்கள் வீட்டுக் குழந்தைகள்  பட்டினி கிடப்பதை தங்களால் சகிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் .  


ஜிம்பாப்வேயில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் நாட்டு மக்கள் பசி பட்டினிக்கு ஆளாகி உள்ளனர் ,  அங்கு மின்சாரம் ,  குடிநீர் ,  ரேஷன் பொருட்கள் கிடைப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர் .  உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி  வருகிறது ,  இதுவரை 210 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவி பெரும் மனிதப் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன .  இதுவரையில் உலக அளவில் சுமார் 18,53,173 லட்சம் பேர்  வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,14, 248 ஆக உயர்ந்துள்ளது.  குறிப்பாக இத்தாலி ஸ்பெயின் ஜெர்மனி அமெரிக்கா இங்கிலாந்து ரஷ்யா போன்ற நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . 

 

Latest Videos

ஆசியா ,  அமெரிக்கா ,  ஐரோப்பா ,  என பரவிய கொரோனா வைரஸ் வேகம் எடுத்து வரும் நிலையில் தற்போது ஆப்பிரிக்க கண்டத்திலும் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது . அங்குள்ள ஜிம்பாப்வே நாட்டில் இந்த வைரஸ் தற்போது வேகமெடுத்து தொடங்கி உள்ளது , இதனால் அந்நாட்டில் மூன்று வாரகால ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது ,  ஏற்கனவே வறுமையில் சிக்கி தவித்து வந்த ஜிம்பாப்வே தற்போது ஊரடங்கு உத்தரவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ,  சாதாரண ஏழை எளிய மக்களை கொண்ட நாடு என்பதால் திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதும் ,  தற்போது நாட்டு மக்கள் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்து அத்தியாவசிய உணவு தேவைக்கு போராடும் நிலை உருவாகியுள்ளது .  அன்றாடம் கிடைக்கும் வேலையை வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில் தற்போது மூன்று வேளை உணவு என்பது தங்களுக்கு கனவாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர் .  

முழு அடைப்பால் அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது என குற்றம் சாட்டும் மக்கள் ,  இதனால் குடிநீர் மின்சாரம் ரேஷன் பொருள் வினியோகம் என அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர்.  தங்கள் கிராமங்களுக்கு என அமைக்கப்பட்டுள்ள போர்வோல்கள் மூலமாக கிடைக்கும் தண்ணீரை எடுத்து பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர் . இதுபோன்ற முழு  அடைப்பு நடவடிக்கைகளுக்கு தங்கள் நாட்டு மக்களால் ஈடுகொடுக்க முடியாது என்று தங்களுக்கு தெரியும் ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் இதை ஜிம்பாப்வே மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம் என தெரிவிக்கின்றனர் . மற்ற நாடுகளைப்போல்  இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியாது என தங்களுக்கு தெரியும் ஆனாலும் அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம் ,  இந்நிலையில் பல நாட்களாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருக்கும் நிலையில் எங்கள் வீட்டுக் குழந்தைகள்  பட்டினி கிடப்பதை தங்களால் சகிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் . 

 

இந்நிலையில் ஜிம்பாப்வேயில்  சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவு பற்றாக்குறைக்கு ஆட்பட்டுள்ளதாக,  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .  ஏற்கனவே ஜிம்பாப்வே மக்கள் காலரா ,  டைபாய்டு ,  மற்றும் எய்ட்ஸ் போன்ற  கடுமையான நோய்களிலிருந்து மீண்டு வந்தவர்கள்  ஆவர் ,  எனவே தற்போது  ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் தங்களால் சமாளிக்க முடியும் ,  இதற்கு முன்னர் தாங்கள் சந்தித்த அவசரகால நெருக்கடிகள் தங்களுக்கு பாடமாக அமைந்துள்ளது என தெரிவிக்கும் அவர்கள் இது போன்ற நெருக்கடிகள் உலகிற்கு  உயிர் வாழ போராட கற்றுக் கொடுக்கும் என கூறுகின்றனர்.  விரைவில் இதிலிருந்து விடுபடுவோம்  என்ற நம்பிக்கையோடு ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர் . 

 

click me!