210 நாடுகள்..! 1.14 லட்சம் உயிரிழப்புகள்..! உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா..!

Published : Apr 13, 2020, 08:01 AM IST
210 நாடுகள்..! 1.14 லட்சம் உயிரிழப்புகள்..! உலகை உலுக்கி எடுக்கும் கொரோனா..!

சுருக்கம்

கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 090 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். மொத்தமாக 18 லட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு 13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரையில் 5 லட்சத்து 59 ஆயிரத்து 409 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 105 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 071 பலியாகி இருக்கும் நிலையில் நேற்று மட்டும் ஆயிரத்து 528 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு தாக்குபிடிக்க முடியாமல் வல்லரசு அமெரிக்காவே நிலைகுலைந்து போயிருக்கிறது. 

PREV
click me!

Recommended Stories

Top 5 Oldest Cities In The World: 11,000 ஆண்டுகால வரலாறு: உலகின் மிகப் பழமையான 5 நகரங்கள்; பட்டியலில் இடம்பிடித்த இந்திய நகரம் எது?
Bigfoot : 10 அடியில் ராட்சஸ மனிதனா? திகிலூட்டும் செய்தியின் ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா!