“இன்னும் 48 மணி நேரத்தில் 3-ம் உலகப்போர் தொடங்கும்..” இந்தியாவின் புதிய நாஸ்ட்ராடாமஸ் பகீர் கணிப்பு..

By Ramya s  |  First Published Jun 17, 2024, 3:01 PM IST

'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார், அடுத்த 48 மணி நேரத்திற்குள் 3ம் உலகப் போர் தொடங்கலாம் என்று கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார், அடுத்த 48 மணி நேரத்திற்குள் 3ம் உலகப் போர் தொடங்கலாம் என்று கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல்கள், வட கொரிய வீரர்கள் தென் கொரியாவிற்குள் நுழைவது மற்றும் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே பதட்டம் அதிகரிப்பு உள்ளிட்ட பல ஆபத்தான சம்பவங்களை குமார் எடுத்துரைத்தார். ஜூன் 18, 2024, உலகளாவிய மோதலைத் தூண்டக்கூடிய நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், " ஜூன் 18-ம் தேதி, (18.06.2024) மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான கிரக தூண்டுதலைக் கொண்டுள்ளது. இந்திய பக்தர்கள் மீதான சமீபத்திய பயங்கரவாத தாக்குதல் மற்றும் வடகொரிய துருப்புக்கள் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்குள் ஊடுருவியது ஆகியவை என் கணிப்புக்கு ஆதாரம்.” என்று கூறினார்.

Tap to resize

Latest Videos

undefined

திடீரென மெதுவாகச் சுத்தும் பூமியின் உட்கரு! 2010 லயே இப்படி ஆகிருச்சாம்! காரணம் என்ன தெரியுமா?

ஜூன் 10 ஆம் தேதி 3 ஆம் உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்று குஷால் குமார் ஏற்கனவே கணித்திருந்தார். ஆனால், அது நிறைவேறவில்லை. இருப்பினும், தற்போது மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கு ஜூன் 18-ம் தேதி வலுவான கிரக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்று அவர் கணித்துள்ளார். அதே போல். ஜூன் 29 ஆம் தேதியை மற்றொரு சாத்தியமான அழிவு நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மூன்றாம் உலகப் போரின் முன்னறிவிப்பு உலகளவில் எச்சரிக்கை மணிகளை எழுப்பியுள்ளது, குறிப்பாக பல்வேறு நாடுகளில் அதிகரித்து வரும் பதட்டங்களின் வெளிச்சத்தில். கியூபாவிற்கு போர்க்கப்பல்களை அனுப்புவது உட்பட ரஷ்யாவின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் தைவான் அருகே சீனாவின் போர் ஒத்திகைகள் அமைதியின்மையை மேலும் அதிகரித்துள்ளன.

குஷால் குமாரின் கணிப்புகள் கவனத்தை ஈர்த்தாலும், பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் நிபுணர்களும் உலகளாவிய மோதலைத் தடுக்க இராஜதந்திர தீர்வுகளின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். உலகளாவிய விவகாரங்களின் பலவீனமான நிலை மற்றும் சர்ச்சைகளைத் தீர்ப்பதில் உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை இந்த கணிப்பு சுட்டிக்காட்டுகிறது..

இரண்டே நாளில் சாகடிக்கும் அரிய வகை சதை உண்ணும் பாக்டீரியா! ஜப்பானில் பரவுவதாகத் தகவல்!

உலகமே இந்த கணிப்பை அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், 'நியூ நோஸ்ட்ராடாமஸ்' 3ம் உலகப் போரின் முன்னறிவிப்பு, உலக அளவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண விழிப்புணர்வு மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவரின் இந்த கணிப்பு சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும்,  உலகில் அதிகரித்து வரும் பதட்டங்களின் சாத்தியமான விளைவுகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமாகிறது.

click me!