உலகில் தலை சிறந்த 10 ராணுவம்..!! இந்தியாவுக்கு அதில் எத்தனையாவது இடம் தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Jul 4, 2020, 5:45 PM IST
Highlights

உலக அளவில் ராணுவ வலிமையில் 7வது இடத்தில் உள்ள நாடு ஜப்பான், இது உலகின் மிக முன்னேறிய நாடு மற்றும் எப்போதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் தலைசிறந்து விளங்குகிறது, 

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போராக மாறுவதற்குகூட வாய்ப்பிருக்கிறது என பல்வேறு சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்து வருகின்றனர்.  தென்சீனக்கடல் தொடங்கி லடாக் எல்லை வரை சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்து வரும் நிலையில்,  சீனாவின் ஆக்கிரமிப்பு கொள்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கும் முதல் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அந்த வகையில் கிழக்கு லடாக்  எல்லையில், சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை எதிர்கொள்வதற்கான ஆற்றல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை மறு ஆய்வு செய்ய உள்ளதாகவும் அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தனது படைகளை குறைத்து அதை ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், அந்நாடு அறிவித்துள்ளது. 

ஒருவேளை இந்தியா, சீனா இடையே போர் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு  ஆதரவாக களமிறங்கும், அப்படியெனில் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். பின்னர் பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் சீனாவுக்கு பக்கபலமாக முன்வர கூடும், அதேநேரத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா தன்னுடைய பழைய நண்பனான இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது நட்பு பாராட்டி வரும் சீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்ற குழப்பத்திற்கு தள்ளப்படும் என சர்வதேச நாளேடுகள் கணித்துள்ளன. இந்நிலையில் போர் என்று ஒன்று ஏற்பட்டால் உலக அழிவு என்பது நிச்சயம், அதேநேரத்தில் ராணுவ வலிமையில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தில் உள்ளன என்பது அறிந்து கொள்ளவதில் அனைவர் மனதிலும் ஆர்வம் மேலெழசெய்கிறது. இந்நிலையில்  தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் பத்து வலிமை மிக்க ராணுவத்தை வரிசைப்படுத்தியுள்ளது, அந்த வகையில் சக்தி வாய்ந்த ராணுவ வரிசையில்,  10 ஆவது இடத்தில் எகிப்த் நாட்டு ராணுவம் இடம்பெற்றுள்ளது, இந்த ராணுவத்திற்காக ஆண்டுக்கு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கப்படுவதாகவும் உலக அளவில் சக்தி வாய்ந்த 10 ராணுவம் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் ராணுவ வலிமையில் 9வது இடம் பிடித்துள்ள நாடு ஜெர்மனி ஆகும், படைபலம் மற்றும் தொழில் நுட்ப அடிப்படையில் இந்நாட்டுக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. 8வது இடம் பிடித்துள்ள நாடு துருக்கி உலக அளவில் வலிமைமிக்க ராணுவமாக கருதப்படும் இந்நாடு ரேடார் கண்காணிப்பில் சிறந்து விளங்குவதாகவும், அதிதொழில்நுட்பத்துடன் கூடிய  விமானப்படையை கொண்ட நாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக அளவில் ராணுவ வலிமையில் 7வது இடத்தில் உள்ள நாடு ஜப்பான், இது உலகின் மிக முன்னேறிய நாடு மற்றும் எப்போதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளில் தலைசிறந்து விளங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே உலகின் மிக சக்திவாய்ந்த படைகளின் பட்டியலில்  ஜப்பான் ஏழாவது இடத்தில் இருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.  6வது இடத்தில் இருக்கும் நாடு பிரிட்டன், இது மிக நீண்ட பாரம்பரியமிக்க ராணுவமாகவும் தொழில்நுட்ப வலிமையில் தலைசிறந்தும் விளங்குகிறது.  5வது இடத்தில் உள்ள நாடு பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் வலிமை மிக்க ராணுவமாக பிரான்ஸ் திகழ்கிறது. தலைசிறந்த நாடுகளின் ராணுவ பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது, இராணுவ அபிவிருத்தித் துறையில் விரைவான முன்னேற்றம் கண்ட நாடு இந்தியாவைத் தவிற வேறெதுவும் இல்லை, இந்திய ராணுவம் அனைந்து வகையிலும் தலைசிறந்த ராணுவம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  3வது இடத்தில் இருப்பது சீனா. பல நாடுகளுடன் இந்த நாட்டுக்கு மோதல்கள் சர்ச்சைகள் இருந்து வருகிறது. அதேநேரத்தில் இது சக்தி வாய்ந்த ராணுவம் என்பதை யாராலும் மறுக்க முடியது. 2வது இடத்தில் உள்ள நாடு ரஷ்யா, இது உலகின் மிகப் பெரிய நாடு மட்டுமல்ல, இரண்டாவது மிக வலிமை மிக்க மற்றும் சக்திவாய்ந்த இராணுவத்தைக் கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறது. உலகிலேயே ராணுவ வலிமையில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா,இந்நாடு முதலிடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை, மேலும் அது இப்போது சில காலமாக யூஎன்ஒ அந்தஸ்தைப் பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. 

 

click me!