இந்நிலையில் கொரோனா வைரஸை தாங்கள் திறம்பட நிர்வகித்துவிட்டதாகவும் சீனா நிம்மதி பெருமூச்சு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக வூகனில் 11 மில்லியன் குடியிருப்புகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவை தாக்க தொடங்கிய நிலையில் தற்போது அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது இந்நிலையில் வைரஸ் பரவிய ஹூபே மாகாணத்தில் பயண கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக சீனா அறிவித்துள்ளது, கடந்த இரண்டு மாதங்களாக ஹூபே மாகணமும் வுகான் நகரமும் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அந்த நகரில் ஆரோக்கியமானவர்கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் மாகாணத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்நிலையில் கொரோனா தோன்றிய வூக்கன் நகரில் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்படும் என சீனா அறிவித்தது .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த போராடி வரும் நிலையில் அந்த வைரஸ் தோன்றிய ஹூபே மகாணத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கிய தகவலின்படி உலக அளவில் இந்த வைரசுக்கு சுமார் 16 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் , சுமார் 3 லட்சத்து 81 ஆயிரத்து க்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் கொரோனா வைரஸை தாங்கள் திறம்பட நிர்வகித்துவிட்டதாகவும் சீனா நிம்மதி பெருமூச்சு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக வூகனில் 11 மில்லியன் குடியிருப்புகள் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாகவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் மொத்தம் 3270 பேர் உயிரிழந்ததாகவும் , சுமார் 81 ஆயிரத்து 93 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் சீனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது . இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள சீன உயருமட்ட மருத்துவ குழு நாடு முழுவதும் வைரஸ் பரவுவதையும் குறிப்பாக வுகான் மையப்பகுதியில் வைரஸ் பரவுவதை சீனா முற்றிலுமாகத் தடுத்திருக்கிறது என தெரிவித்துள்ளனர். அதே போல் வூகனில் மருத்துவ சிகிச்சை மற்றும் சமூக அளவிலான கட்டுப்பாடுகள் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டும் , புதிதாக கிருமித்தொற்று ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் முறையான தொற்றுநோய் விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டுமென வூகான் நகருக்கு மருத்துவ குழு எச்சரித்துள்ளது.