உலக நாடுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் இந்தியா..!! கொரோனாவை தடுக்க தொழில்நுட்பம் அவசியம் ..??

By Ezhilarasan BabuFirst Published Mar 24, 2020, 12:55 PM IST
Highlights

தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையிலிருந்து அவர்கள்  அத்துமீறும் போது ,  வீட்டைவிட்டு வெளியேறும்போது அது அதிகாரிகளுக்கு சமிக்ஞை தரும்  வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . 

தனிமைப்படுத்துதலை திறம்பட செயல்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்தியா உலக நாடுகளிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .  இதுபோன்ற காலங்களில் விதிமுறைகளை மீறுபவர்கள்  மீது , ஆங்காங் ,  ஆஸ்திரியா ,  பெல்ஜியம் ,  மற்றும் தைவான் போன்ற  நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை போல இந்தியா எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது . கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளை பின்பற்றுவதில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .  இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு  அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார் . ஆனால் அவரகளை கண்காணிக்க திட்டம் என்ன என்பது குறித்து தெரிவிக்க வில்லை. 

 அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் விவரங்கள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் பகிரப்பட்டு உள்ளதால்  அவர்களின்  நடமாட்டம் குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார் .  இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூர் போன்றவர்கள் அரசு உத்தரவை மீறிய  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்,  ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை .  இந்நிலையில் ஆங்காங்,  அந்நாட்டில்  தனிமைப்படுத்தப் பட்டவர்களை கண்காணிக்க அவர்களுக்கு எலக்ட்ரானிக்  கை கடிகாரங்களை பொருத்தி அவர்களை கண்காணித்து வருவதுடன் ,  அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினால்  அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும்  வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அதே  நேரத்தில்  வெளிநாடுகளில் இருந்து விமான நிலையம் வரும் பயணிகளுக்கு  அவர்கள் கையில் QR குறியீடுகளை கொண்ட பட்டைகள் கையில் கட்டுவதுடன்,  அவர்களுடைய விவரங்கள் ,  தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்வதுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட  நிலையிலிருந்து அவர்கள்  அத்துமீறும் போது ,  வீட்டைவிட்டு வெளியேறும்போது அது அதிகாரிகளுக்கு சமிக்ஞை தரும்  வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . 

 இதேபோல் தைவான் ஒரு மின்னணு வேலியை செயல்படுத்தி உள்ளது மக்கள் பயன்படுத்தும் தொலைபேசியின் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களை  கண்காணித்து வருகின்றனர் .  தொலைபேசி அணைக்கப்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்படும் அதனடிப்படையில் அதிகாரிகள் அவர்களை கண்காணிக்கின்றனர் இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களை கண்காணித்து அவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இதேபோல் அவர்கள்  குறித்த முழு விவரத்தையும் சேகரித்து அவர்களை கண்காணித்து வருகிறது .  பெல்ஜியமும் இதேபோன்ற நடைமுறையை பின்பற்றுகிறது அதாவது உள்ளூர் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுடன்  இணைந்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களை கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர் ஆனால் இந்தியாவில் அது போன்ற எந்த தொழில்நுட்பம் சார்ந்த கண்காணிப்பு முறையும் இல்லை என்பது கவலை அளிக்கிறது .

 

click me!