உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியல் ! முகேஷ் அம்பானி எத்தனையாவது இடம் தெரியுமா ?

By Selvanayagam P  |  First Published Jul 19, 2019, 8:26 AM IST

உலகம் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 17 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.


உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலை, ‘புளூம்பெர்க்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது.  இந்த பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 17 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Latest Videos

இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ பணக்காரரும், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவருமான முகேஷ் அம்பானி, 51.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.அசிம் பிரேம்ஜி 20.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 48-ஆவதுஇடத்திலும், ஷிவ் நாடார் 14.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 92-ஆவது இடத்திலும், உதய் கோடாக்13.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 96-ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.


 
லட்சுமி மிட்டல் 112-ஆவது இடத்திலும், கவுதம் அதானி 151-ஆவதுஇடத்திலும், ராதாகிருஷ்ணன் தமணி 193-ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.அமேசான் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான ஜெப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். 

எல்.வி.எச்.எம். நிறுவனத்தின் பெர்னார்டு அர்னால்ட் (108 பில்லியன் டாலர்)இரண்டாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (107 பில்லியன் டாலர்) மூன்றாம் இடத்திலும், வாரன் பபெட் (83.9 பில்லியன் டாலர்) நான்காம் இடத்திலும், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் (79.5 பில்லியன் டாலர்) ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.

click me!