மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட பில்கேட்ஸ் ! புளூம் பர்க் நிறுவனம் தகவல் !!

By Selvanayagam P  |  First Published Jul 17, 2019, 8:59 PM IST

உலகில் அதிக சொத்து கொண்ட இரண்டாவது பணக்காரர் என்ற பட்டியலில் பில்கேட்ஸை பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 
 


உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியவை புளூம்பர்க் நிறுவனம்  வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். 

Latest Videos

இந்நிலையில், பிரான்சின் எல்விஎம்ஹெச் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் 2-ம் இடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.

தற்போதும் ஜெஃப் பெசோஸ் 125 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்திலும், 108 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பெர்னார்ட் 2-ம் இடத்திலும், 107 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில்கேட்ஸ் 3-ம் இடத்திலும் உள்ளனர். 

click me!