குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடத் தடை... சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..!

Published : Jul 17, 2019, 06:43 PM IST
குல்பூஷன் ஜாதவை தூக்கிலிடத் தடை... சர்வதேச நீதிமன்றம் உத்தரவு..!

சுருக்கம்

குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது,    

குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்துள்ளது,  

2016 உளவு பார்த்ததாக பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார் குல்பூஷன் ஜாதவ். கைது செய்யப்பட்ட ஒரே மாதத்தில் இந்திய கடற்படையை சேர்ந்த முன்னாள் அதிகாரியான ஜாதவுக்கு 2017ம் ஆண்டு மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். இதனை எதிர்த்து இந்தியா நெதர்லாந்து தி ஹேக் நீதிமன்றத்தில் முறையிட்ட்டது. இதனை பரிசீலிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் கூறியது. தனது தீர்ப்பை பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தீர்ப்பளித்த 16 நீதிபதிகளில் 15 பேர் இந்தியாவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர்.  

இதனால்க் அவருக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே வேளை அவர் இந்தியா -பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமும் விடுதலை செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.  

PREV
click me!

Recommended Stories

'ஆயிரக்கணக்கானோர் தியாகத்திற்கு தயார்' மசூத் அசாரின் வைரல் ஆடியோவால் பரபரப்பு!
பற்றி எரியும் ஈரான்.. அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்.. புது குண்டை தூக்கிப்போட்ட டிரம்ப்!