பாகிஸ்தானை இப்படியா கேவலப்படுத்துவது...!! இம்ரானுக்கு கூச்ச நாச்சமே இல்லையா..??

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2020, 1:59 PM IST
Highlights

தீவிரவாத நிதி உதவியை பாகிஸ்தான்  முழுவதுமாக  தடுக்காவிட்டால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
 

தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சர்வதேச நிதி நடவடிக்கை  பணிக்குழு பாகிஸ்தானுக்கு மீண்டும் அவகாசம் அளித்துள்ளது .  பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சர்வதேச அளவில் நிதி வசூலிக்கப்படுகிறது என்றும் ,  உலக வங்கி மற்றும் அமெரிக்க  போன்ற நாடுகள் பாகிஸ்தானின்  வளர்ச்சிக்காக கொடுக்கும்  நிதியை பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு செலவிடுகிறது என சர்வதேச அளவில் இந்தியா  உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.  இதனடிப்படையில்  பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியை தடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச நிதி நடவடிக்கைகள்  குழு எச்சரித்துள்ளது . இந்நிலையில் அதற்கான கூட்டம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த 16ஆம் தேதி முதல் நேற்று வரை நடந்தது . 

 

இதில் நிதி நடவடிக்கை குழு நிபந்தனைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுமார்  650 பக்க அறிக்கையை பாகிஸ்தான் சமர்ப்பித்தது .  இதில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை  பணிக்குழு மீண்டும் அவகாசம் அளித்துள்ளது .  தீவிரவாதத்திற்கு நேரடியாகவோ அல்லது   மறைமுகமாகவும் உதவும் நாடுகள் மீது சர்வதேச கண்காணிப்பு அமைப்பான நிதி நடவடிக்கை பணி குழு நடவடிக்கை எடுத்து வருகிறது .  இந்த வகையில் தீவிரவாத அமைப்புக்கு நிதி கிடைப்பதை  பாகிஸ்தான் தடுக்காததால்  அது   சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில் இந்த சாம்பல் பட்டியலில் இருந்து  பாகிஸ்தான் பெயர் நீக்கப்படுவதற்கு பாகிஸ்தானுக்கு 26 அம்ச செயல்திட்டம் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன . 

 

அதனடிப்படையில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட  ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவன் ஹபீஸ் சையத் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டான் அவனுக்கு பாகிஸ்தானில் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் இந்த நடவடிக்கை குழு கூட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.   இதுபற்றி விவாதித்த நிதி நடவடிக்கை பணிக்குழு நிபந்தனைகளை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு மீண்டும் அவகாசம் வழங்கி உள்ளது .  இந்த அவகாசத்திற்குள் தீவிரவாத நிதி உதவியை பாகிஸ்தான்  முழுவதுமாக  தடுக்காவிட்டால் பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!