தாஜ்மஹாலை காண அசைப்பட்ட இவான்கா ட்ரம்ப் ...!! மகள் மனைவியுடன் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர்...!!

By Ezhilarasan Babu  |  First Published Feb 21, 2020, 5:39 PM IST

அவர் இந்தியா வருகை தர உள்ளதை அறிந்த அவரது  மகள் தானும்  இந்தியா வர விரும்புவதாக கூறியதை அடுத்து அவரும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா இந்தியா வருகை தர இருந்த நிலையில் இறுதி நேரத்தில் அவர்களது பயணதில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதாவது அவர்களது  மகள் இவான்கா ட்ரம்பும் உடன் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவர் மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகிய  இருவரும் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக  இந்தியா வர உள்ளதாக அறிவிப்பு வெளியானது .  இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப்  அவரது மனைவி மெலானியா இரண்டு நாட்கள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்  என வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டது .

 

Latest Videos

ட்ரம்ப்  குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு வருகை தர உள்ளார் ,  அஹமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகிய மோதிர கிரிக்கெட் அரங்கை ட்ரம்ப்  மோடி திறந்து வைக்கின்றனர். அதன்பின்னர் மோடியுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் ட்ரம்ப்,   பின்னர் அவரும்  அவரது மனைவி மெலானியாவும்  தாஜ்மஹால் சென்று பார்வையிடுகின்றனர் .  முதலில் அகமதாபாத் பயணம் மேற்கொள்ளும் அவர்கள் பின்னர் ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் நடக்கும்   நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இவ்வாறு திட்டமிடப்பட்டிருந்த நிலையில்  டிரம்ப் மெலானியா பயணத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது ,   அதாவது டிரம்பின் மகளும் அவரின் மூத்த ஆலோசகர்களில் ஒருவருமான அவரது மகள்  இவான்காவும் இந்திய சுற்றுப்பயணத்தில் இணைகிறார் என கடைசி நேரத்தில் தகவல் கிடைத்துள்ளது .  இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹைதராபித் வருகை தந்திருந்தார்.  

இந்நிலையில் ட்ரம்புடன்,  வர்த்தகத் துறை செயலாளர் வில்பர் ரோஸ் ,  அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் டான் பிரவுன் லைட் ,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சீ பிரைன் ,  வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி மைக் முல்வானே ஆகிய குழுவினர் வருகை தர உள்ளனர் . ஜனாதிபதியாக பொறுப்பேற்று முதல் முறையாக இந்தியா வரவுள்ள ட்ரம்ப்  அவராது மனைவி மற்றும் மகளுடன்  குடும்பத்துடன் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்,  ட்ரம்ப் இந்திய பயணத்தை  முக்கியமானதாக கருதுவதாக கூறப்படுகிறது . அவர் இந்தியா வருகை தர உள்ளதை அறிந்த அவரது  மகள் தானும்  இந்தியா வர விரும்புவதாக கூறியதை அடுத்து அவரும் இந்த சுற்றுப்பயணத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ட்ரம்ப்  குடும்பத்தினர் இந்திய பயணத்தை வெகுவாக விரும்புவதாக கூறப்படுகிறது இந்நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக அளவில்  வரி விதிப்பதாக ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் அவர் தன்னுடன் வர்த்தகக் குழு ஒன்றையும் இந்தியாவுக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது .

 

 

click me!