ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சி வாா்த்தைகள்!

First Published Nov 27, 2016, 10:49 AM IST
Highlights


ஃபிடல் காஸ்ட்ரோ, 1959-ல் தனது புரட்சியைத் தொடங்கி கியூபாவை கம்யூனிச தேசமாக உருவாக்கியவர். உலகின் மேற்குப் பாதியில் முதன்முதலாக ஒரு கம்யூனிஸ தேசத்தை உருவாக்கியவர் அவர். சோவியத் ரஷ்யா துண்டு துண்டாகிவிட்ட நிலையிலும்கூட நம்பிக்கை இழக்காமல் கம்யூனிஸத்தை ஆதரித்த ஒரே நபர் ஃபிடல் காஸ்ட்ரோ. அவருடைய பேச்சுகள் புரட்சியின் வித்துக்கள். ஒரு மாபெரும் புரட்சியாளர் மறைந்தாலும் அவர் உதிர்த்த வார்த்தைகள் என்றும் அவரை நிலைநிறுத்தும். இதாே அவை...

* நான் குற்றவாளி என்று தீர்ப்பளியுங்கள். அதற்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. ஏனெனில், வரலாறு என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கும் - 1953.

 

* புரட்சி என்பது ரோஜாக்களால் ஆன மெத்தை அல்ல. அது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையேயான போராட்டம் - 1959.

* எனது புரட்சியை 82 ஆதரவாளர்களோடு தொடங்கினேன். இப்போது மீண்டும் புரட்சியை தொடங்க வேண்டும் என்றால் 10 அல்லது 15 ஆதரவாளர்களுடன் தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு ஆரம்பிப்பேன். ஏனெனில் உங்கள் இலக்குக்கான எதிர்கால திட்டம் வகுக்கப்பட்டிருந்தால், நம்பிக்கை இருந்தால் சிறு படைகூட புரட்சிக்கு வித்திடும் - 1959.

 

 

* எனது தாடியை சவரம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை. தாடி எனக்கு பழக்கமாகிவிட்டது. இந்தத் தாடி என் மீது இத் தேச மக்களுக்கு நிறைய கற்பிதங்களைக் கொடுத்திருக்கிறது. நல்லாட்சிக்கான வாக்குறுதியை நிறைவேற்றும்போது எனது தாடியை சவரம் செய்து கொள்வதாக இருக்கிறேன் - 1959.

 

 

* உண்மையின் பக்கம் நாம் சார்ந்திருத்தல் அவசியம். எளிமையாக சொல்ல வேண்டுமானால் சோஷலிச கூடாரம் சரிந்தது- 1991.

 

* பாலியல் தொழிலாளர்களையும் கல்லூரி பட்டதாரிகளாக்கியதே புரட்சியின் மிகப் பெரிய பலன் - 2003.

 

 

* அமெரிக்காவுக்கு எதிரான யுத்தமே எனது உண்மையான எதிர்காலம் என நான் உணர்ந்திருந்தேன் - 2004.

 

 

* ஆண்டுகள் பல கடந்துவிட்ட பிறகு நான் ஓர் இறுதி முடிவுக்கு வந்துள்ளேன். நாம் இதுநாள் வரை செய்த பிழைகளிலேயே மிகப் பெரியது சோஷலிசத்தை கட்டமைக்கத் தெரியும் என யாரோ கூறியதை நம்பியதே. எப்போதெல்லாம் 'இதுதான் சூத்திரம்' என அவர்கள் சொன்னபோதெல்லாம் அவர்கள் அதை புரிந்து உணர்ந்து சொல்கிறார்கள் என நம்பினோம். ஒரு மருத்துவரின் வார்த்தைகள் மீதான நம்பிக்கை போன்றது அது. - 2005.

* எனக்கு 80 வயதாகிவிட்டது. உண்மையாகவே மகிழ்கிறேன். இது சாத்தியமாகும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனெனில் உலகில் ஒரு மாபெரும் சக்தியை அண்டை நாடாகக் கொண்டிருந்தோம். அதுவும் அந்த நாடு என் கதையை முடிக்க எப்போதும் ஆயத்தமாயிருந்தது. - 2006.

 

* கியூப அதிபராகவோ அல்லது படைத் தளபதியாகவோ ஆக வேண்டும் என நான் ஆசைப்பட மாட்டேன். ஏன் அந்த வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டாலும் ஏற்க மாட்டேன். அவ்வாறு நான் செய்தால் அது என மனசாட்சிக்கு செய்யும் துரோகம். அந்தப் பதவிகளை வகிக்க மிக அதிகமான செயலாற்றலும், அர்ப்பணிப்பும் தேவை. ஆனால், என் உடல்நிலை இப்போது இருக்கும் நிலையில் அந்த அர்ப்பணிப்பு சாத்தியமற்றது- 2008.

click me!