"காஸ்ட்ரோ ஒரு கொடூர சர்வாதிகாரி, இனி கியூபா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்" - ட்ரம்ப் கடும் தாக்கு

First Published Nov 27, 2016, 10:16 AM IST
Highlights


மறைந்த கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவை, கொடூர சர்வாதிகாரி என, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியிருப்பது, இரு நாட்டு உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிடல் காஸ்ட்ரோ. தனது 49 ஆண்டுகால கியூபாவில் பாெறுப்பு வகித்து வந்த அவர், உடல்நலக் காேளாறு காரணமாக கடந்த 2008-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினாா். பின்னா் தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபா அதிபராக்கினார். இந்நிலையில், நேற்று அவர் காலமானார். பிடல் காஸ்ட்ரோ மறைவை அந்த நாட்டு மக்கள் பெரும் துக்கதினமாக அனுசரித்து வருகின்றனர். காஸ்ரோவின் மறைவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த 60 ஆண்டுகளாக கியூபா, சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

காஸ்ட்ரோ ஏற்படுத்திய உயிரிழப்புகள், ரணங்கள், வலிகள் என்றும் ஆறாது என குறிப்பிட்டுள்ள அவர், காஸ்ட்ரோவின் மரணத்தை அடுத்து, இனி, கியூப மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வரும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார். அதற்கு, அமெரிக்காவில் புதிதாக அமையவுள்ள தனது தலைமையிலான அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா-கியூபா இடையே அரை நூற்றாண்டுகளாக நீடித்துவந்த மோதல், ஓபாமா அதிபரான பின் முடிவுக்கு வந்ததுடன், இரு நாட்டு உறவிலும் மீண்டும் புத்துயிர் பிறந்தது. 

இந்நிலையில், ஃபிடல் காஸ்ட்ரோவை, அமெரிக்க அதிபர் அரியணையில் ஏறவிருக்கும் டிரம்ப் கடுமையாக சாடியிருப்பது, இரு நாட்டு உறவில் மீண்டும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

click me!