
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், கிர் வனப்பகுதியில் 12 சிங்கங்கள் சூழ்ந்த கொள்ள ஆம்புலென்சில் பெண் ஒருவர் ஆண் குழந்தையை பெற்று எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கிர் சரணாலயம்
குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிங்கங்களுக்கான கிர் வனச் சரணாலயம் இருக்கிறது.
இந்த சரணாலயத்துக்கு அருகே இருக்கும் இலுன்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் மங்குபென் மக்வானா(வயது32).
பிரசவ வலி
இவர் நிறைமாக கர்பிணியாக இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு மங்குபென்னுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, 108 ஆம்புலென்சுக்கு போன் செய்து, வரவழைத்தனர். மங்குபென்னையும், உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஜபார்பாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல காட்டுப்பாதையில் ஆம்புலென்ஸ் சென்றது.
12 சிங்கங்கள்
ஆனால், திடீரென சாலையை மறித்து 12 சிங்கங்கள் ஒன்று நடந்து வந்தன. இதைப் பார்த்த ஆம்புலென்சின் டிரைவர், அதிர்ச்சியில் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டார்.
ஆனால், ஏறக்குறைய 20 நிமிடங்களாக சிங்கங்கள் அந்த ஆம்புலென்சை சுற்றி நின்று கொண்டு நகரவே இல்லை.
ஆம்புலென்சின் விளக்கு ஒளியையும் கண்டுகொள்ளவில்லை.
சூழந்த சிங்கங்கள்
இந்நிலையில், ஆம்புலென்சில் இருந்த மங்குபென்னுக்கு பிரசவ வலி அதிகமாகி, துடிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து, குழந்தை எந்த நேரமும் பிறக்கும் சூழல் இருப்பதை அறிந்த செவிலியர்கள், உதவியாளர்கள் ஆம்புலென்ஸை நிறுத்தக் கூறினர். ஆம்புலென்சில் இருந்த, செவிலியர்கள், உதவியாளர்கள், உடனடியாக மருத்துவமனையின் மருத்துவர்களை தொடர்பு கொண்டு விவரங்களைக் கூறினர்.
ஆண் குழந்தை
இதையடுத்து செல்போனில் மருத்துவர்கள் கொடுத்த அறிவுரையின்படி, மகுபென்னுக்கு, ஆம்புலென்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். 25 நிமிடங்களில் மகுபென் அழகான ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்.
மருத்துவமனைில் அனுமதி
இது குறித்து 108 ஆம்புலென்சின் தலைமை மருத்துவ உதவியாளர் கூறுகையில், “ ஆம்புலென்சின் டிரைவர் ஜாதவுக்கு, சிங்கங்களின் நடத்தையும், பழக்கமும் தெரியும் என்பதால், வாகனத்தை சிங்கங்கள் சூழ்ந்தவுடன் நகற்றவில்லை. ஆனால், வாகனத்தில் இருந்த மங்குபென்னுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனால், நிலையைமை புரிந்து கொண்டு, மருத்துவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் அறிவுரைப்படி, வாகனத்தில் இருந்த மருந்துகள், கருவிகளை வைத்து பிரசவம் பார்த்தோம்.
குழந்தை பாதுகாப்பான முறையில் பிறந்தபின் மெல்ல ஆம்புலென்சை அந்த இடத்தில் இருந்து நகற்றினோம்.
சிங்கங்கங்களும் வழிவிடத் தொடங்கின. இதையடுத்து, ஜாப்ராபாத் அரசு மருத்துவமனையில் மங்குபென்னும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டனர்’’ எனத் தெரிவித்தார்.
12 சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்த ஆண் குழந்தை என்று அறிந்ததும், மருத்துவமனையில் வந்து ஏராளமானோர் குழந்தையை பார்த்துச் செல்கின்றனர்.