வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இன்பச் செய்தி - நாளை முதல் ‘டிபார்ச்சர் கார்டு’ தேவையில்லை

 
Published : Jun 30, 2017, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு இன்பச் செய்தி - நாளை முதல் ‘டிபார்ச்சர் கார்டு’ தேவையில்லை

சுருக்கம்

Departure cards are not required for foreign nationals going abroad

வௌிநாடு செல்லும் இந்தியர்கள் விமானநிலையத்தில், தான் எங்கு செல்கிறோம் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கும் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கும் முறை நாளை(ஜூலை1-ந்தேதி) முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌி நாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும்.

இது குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமானநிலையங்களில் இருந்து வௌிநாடு செல்லும் இந்தியர்கள் தங்களின் பெயர், பாஸ் போர்ட் எண், பிறந்ததேதி, எந்த நாட்டுக்கு செல்கிறோம், விமான எண், முகவரி, தேதி உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு இருக்கும் ‘ டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக் கொடுக்கும் முறை ஜூலை 1-ந் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

அதேசமயம், ரெயில், கப்பல் மற்றும் சாலை மார்க்கமாக வௌி நாடு செல்லும் இந்தியர்கள் வழக்கம் போல் ‘டிபார்ச்சர் கார்டு’ நிரப்பிக்க கொடுக்க வேண்டும். இதன் மூலம் வௌி நாடுசெல்லும் இந்தியர்கள் நீண்ட நேரம் குடியேற்றதுறையில் காத்திருக்க வேண்டியது இல்லை. அதே சமயம், வௌி நாடுகளில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், இதே போன்ற விவரங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டும் முறை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்தியாவுக்கு வரும் இந்தியர்கள், தாங்கள் கொண்டுவரும் பொருட்களில் வரிவிதிப்பு உட்படாத பொருட்கள் இல்லை என்பதை யும் தெரிவிக்கும் முறையையும் சுங்கவரித்துறையினர் ரத்து செய்துவிட்டனர். தடை செய்யப்பட்ட மற்றும் வரிவிதிப்புக்கு உட்பட்ட பொருட்கள் கொண்டு வந்தால் அது குறித்து இந்திய சுங்கவரித்துறை விவரப்படிவத்தில் நிரப்பிக்கொடுப்பது கட்டாயமாகும்.

PREV
click me!

Recommended Stories

17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!
காசா மக்களை மறக்க முடியுமா? முதல் கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் போப் லியோ உருக்கம்!