இந்தியாவில் பெண்கள் தான் டாப்… நெதர்லாந்தில் பிரதமர் மோடி பேச்சு…

 
Published : Jun 28, 2017, 07:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
இந்தியாவில் பெண்கள் தான் டாப்… நெதர்லாந்தில் பிரதமர் மோடி பேச்சு…

சுருக்கம்

PM modi speech in Netherland

இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவழியினர் ஹேக் நகரில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து நொர்லாந்து  மார்க் ருட்டேவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுசக்தி விநியோக கூட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியா இடம்பெற நெதர்லாந்து பிரதமர் தமது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் இந்தியா- நெதர்லாந்து இடையே 70 ஆண்டுகால தூதரக உறவுக் கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்

இதனைத் தொடர்ந்து ஹேக் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி, ஐரோப்பாவிலேயே இந்தியர்கள் அதிகளவில் வாழும் இரண்டாவது நாடு நெதர்லாந்து என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வேளாண்மை, தொழில், அறிவியல் போன்ற துறைகளில் இந்தியா சாதனை படைத்துள்ளதாகவும், இந்தியாவின் முன்னேற்றத்தில் பெண்கள் அதிகளவில் பங்களிப்பை வழங்கி வருவதாகவும் மோடி கூறினார்.

பல மேலை நாடுகளில்  கூட கர்ப்பிணி பெண்களுக்கு 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கி வரும் நிலையில், இந்தியாவில் மகப்பேறு விடுமறை 26 வாரங்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

3 நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தாயகம் திரும்பினார். அவருக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.,

 

PREV
click me!

Recommended Stories

ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி
17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!