
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலனியாவுக்கு சில்வர் பிரேஸ்லெட், இமாச்சல பிரதேசத்தின் தேன் மற்றும் டீ தூளை பரிசாக வழங்கினார்.
2 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியாவும், வாசல் வரை வந்து சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் அழைத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து மோடிக்கு டரம்ப் சிறப்பான விருந்தளித்தார். பின்னர் நடைபெற்ற செய்திளார்கள் சந்திப்புக்கு பின், மோடி வெள்ளை மாளிகையை சுற்றிப்பார்த்தார்.
அங்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் பயன்படுத்திய பொருட்களை மோடி கண்டு ரசித்தார்.
இதையடுத்து டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு வெள்ளி கைசெயினை மோடி பரிசளித்தார்.
மேலும் இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தேன் மற்றும் டீ தூளை மெலினாவுக்கு பரிசாக வழங்கினார்.
4 மணி நேரம் வெள்ளை மாளிகையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.