ட்ரம்புக்கு குட்டு வைத்த பேஸ்புக் அதிபர் ஜூகர்பெர்க்..- அகதிகளுக்கு இப்தார் விருந்து வைத்து நெகிழ்ச்சி ...

First Published Jun 26, 2017, 7:55 PM IST
Highlights
Mark Zuckerberg shares Iftar pic with Somalian refugees and you cant ignore the dig at Trump


பேஸ்புக் அதிபரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க், தனது முதல்இப்தார் விருந்தை சோமாலியா முஸ்லிம் அகதிகளுக்கு அளித்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினார்.

இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட, அவருக்கு உலகம் முழுவதும் 2 லட்சம் ‘லைக்குகளும்’ பாராட்டும் , 12 ஆயிரம் ஷேரிங்குகளும் குவிந்தன.

முதல் இப்தார் விருந்து

பேஸ்புக் அதிபர் மார்க் ஜூகர்பெர்க் முதல்முறையாக இந்த ஆண்டு இப்தார் விருந்தை முஸ்லிம்களுக்கு அளிக்க முடிவு செய்தார். இதையடுத்தி, சோமாலியாவில் இருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம் அகதிகளுக்குஇப்தார் அளிக்க முடிவு செய்தார். இதையடுத்து, சோமாலியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் சிலரை மின்னீயாபோலீஸ் நகருக்கு அழைத்து நேற்றுமுன்தினம்இப்தார் விருந்து அளித்தார்.

அது குறித்து ஜூகர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது-

எது சுதந்திரம்

நான் முதல்முறையாக இந்த ஆண்டு சோமாலியா அகதிகளுக்கு இப்தார் விருந்து அளித்தேன். அதில் ஒருவரிடம் நான் கேட்டேன், 26ஆண்டுகள் அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறீர்கள்.அமெரிக்காவை நீங்கள் சொந்த நாடு போன்று உணர்கிறீர்களா என்றேன். அதற்கு அந்த நபர் மிக எளிமையாக, ‘சொந்த நாடு , வீடு என்பது நீங்கள் சுதந்திரமாக ,உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்துக்கு செல்வதாக இருக்கவேண்டும். ஆமாம், அமெரிக்காவை சொந்த நாடாக நினைக்கிறேன்’ எனத் தெரிவித்தார். என்ன ஒரு அருமையான புகழ்ச்சி.

டிரம்புக்கு ‘குட்டு’

இந்த பதில் ஒருவிதத்தில் அதபர் டொால்ட் டிரம்பின் சமீபத்திய முஸ்லிம்களுக்கு எதிரான உத்தரவை சுட்டிக்காட்டுகிறது. முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட 5 நாடுகளில் சோமாலியாவும் ஒன்று.  அந்த தடையை நீக்கினால், அகதிகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.

பாராட்டு

உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு இடத்துக்கு வந்து நீங்கள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கியதை நினைத்து பெருமைப்படுகிறேன். நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளக்கூடியவர்கள். உங்களால் தான் நாடு சிறப்பான பெயரைப் பெறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

நன்றி

இந்த விருந்தில் கலந்து கொண்ட அகதி முகமது ஜமா தனது பேஸ்புக் பக்கத்தில்ஜூகர்பெர்க்குடான விருந்தை அழகாக வர்ணித்துள்ளார். அவர் கூறுகையில், “ பேஸ்புக்நிறுவனர் ஜூகர்பெர்க்குடன் இப்தார் சாப்பிட எனக்கு மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஏராளமான விஷயங்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசினோம். எங்கிருந்து நீங்கள் வந்தாலும்  உங்கள் சொந்த நாட்டில் இருப்பதை போன்ற உணர்வை, வேலைவாய்ப்பை, சுதந்திரத்தை அமெரிக்கா வழங்கும். எந்த மதத்தையும், இனத்தையும், கலாச்சாரத்தையும் மதிக்கும் சிறந்த நபர் ஜூகர்பெர்க்.

பேஸ்புக் மூலம் இந்த உலகை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்குஜூகர்பெர்குக்கு நன்றி எனக் குறிப்பட்டுள்ளார்.

 

click me!