வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி !! சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து அசத்திய டிரம்ப்-மெலனியா தம்பதி!!!

First Published Jun 27, 2017, 4:21 AM IST
Highlights
prime minister modi in white house


நரேந்திர மோடி மிகச் சிறப்பான பிரதமர் என்றும், மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை சேர்க்கிறது  எனவும்  அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர  மோடியை அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான  மெலனியாவும், வாசல் வரை வந்து  சிவப்புக் கம்பள உபசரிப்போடு வெள்ளை மாளிகைக்குள் வரவேற்றனர்..

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க சென்றுள்ளார். இந்திய நேரப்படி நள்ளிரவு 1.40 மணியளவில் வெள்ளை மாளிகை சென்றடைந்தார். அவருக்கு வெள்ளை மாளிகையில் சிகப்பு கம்பளம் வரவேற்று அளிக்கப்பட்டது.

அப்போது  பேசிய டிரம்ப், மிகச்சிறந்த பிரதமரான நரேந்தி மோடி அமெரிக்கா வந்திருப்பது பெருமை அளிக்கிறது என்றும், பொருளாதார ரீதியாக பிரதமர் மோடி, சிறப்பாக செயல்பட்டு வருவதாக  பாராட்டினார்.

இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள நல்லுறவு சிறப்பானது என்றும் இந்த இரு நாடுகளும் இணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப்பின் பாராட்டை ஏற்றுக் கொண்ட மோடி, அதிபர் டிரம்ப் தனக்கு அளித்த வரவேற்பு எனக்கான வரவேற்பு அல்ல என்றும் 125 கோடி இந்தியர்களுக்கான வரவேற்பு என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். பின்னர்  இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

tags
click me!