அச்சோ…!!! ரூ. 38 லட்சம் பிரேஸ்லெட் போச்சே…!! – மயங்கி விழுந்த பெண்…!

 
Published : Jun 29, 2017, 08:35 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
அச்சோ…!!! ரூ. 38 லட்சம் பிரேஸ்லெட் போச்சே…!! – மயங்கி விழுந்த பெண்…!

சுருக்கம்

China woman faints after breaking jade bracelet in jewellery shop

சீனாவில் மிகவும் அழகு வாய்ந்த விலை மதிப்புமிக்க பிரேஸ்லெட்டை கைகளில் அணிந்து பார்த்தபோது, கைநழுவி கீழே விழுந்து உடைந்ததால் பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் யுன்னான் மாகாணத்துக்கு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். அங்கு மிகவும் அழகு வாய்ந்த ஆபரணக் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த 38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜேட் என்ற பச்சை நிறக் கற்களால் செய்யப்பட்ட பிரேஸ்லெட்டை எடுத்து தன் கைகளில் மாட்டி பார்த்துள்ளார்.

மிகவும் அழகு வாய்ந்த ஆபரணங்கள் என்றால் பெண்களுக்கு சொல்லவா வேண்டும். அந்த பிரேஸ்லெட்டை கைகளில் மாட்டி பார்த்து விட்டு கழட்டும் போது, கைநழுவி தரையில் விழுந்த்து. இதில் பிரேஸ்லெட் இரண்டாக உடைந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கடை நிர்வாகம் அந்த பெண்ணிடம் உடைந்த பொருளுக்கு உரிய இழப்பீடு தருமாறு கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து பதற்றமடைந்த அந்த பெண் சிறிது நேரத்தில் படபடப்பு அதிகரித்து மயங்கி விழுந்தார். பின்னர், அப்பெண்ணை மீட்டு ஆபரணக் கடை நிர்வாகம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி
17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!