Earthquake:இந்தியாவில் விரைவில் நிலநடுக்கமா? துருக்கி பூகம்பத்தைக் கணித்த டச்சு ஆய்வாளர் சொல்வது என்ன?

By Pothy Raj  |  First Published Feb 8, 2023, 5:20 PM IST

துருக்கி, சிரியா, லெபானான் நிலநடுக்கத்தை அது வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் பிராங் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வரும் எனத் தெரிவித்துள்ளார்.


துருக்கி, சிரியா, லெபானான் நிலநடுக்கத்தை அது வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் பிராங் ஹூகர்பீட்ஸ் இந்தியாவிலும் நிலநடுக்கம் வரும் எனத் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளரான பிராங்க் ஹூகர்பீட்ஸ் கடந்த 3ம் தேதியே துருக்கி, சிரியா பகுதிகளில் 7.8ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Tap to resize

Latest Videos

துருக்கி நிலநடுக்கப் பேரழிவை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்!

அதுபோலவே கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு துருக்கி, சிரியா எல்லையில் உள்ள காஸ்யென்தெப் நகரிலிருந்து 33கி.மீ தொலைவில் மையத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த நிலநடுக்கம் இரு நாட்டையும் புரட்டிப் போட்டுள்ளது.

சிரியா, துருக்கியில் இதுவரை 11 ஆயிரம் மக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20ஆயிரம் பேர் வரை உயிரிழப்பு வரலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 

துருக்கியின் எல்லைஓர நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் தரைமட்டமாகி மலைபோல் குவிந்துள்ளன. இந்த இடிபாடுகளில் மனிதர்கள் உயிருடந் இருக்கிறார்களா என்று மீ்ட்புப்படையினர் தேடி வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலும் விரைவில் நிலநடுக்கம் ஏற்படலாம், ஆப்கானிஸ்தானில் இருந்து நிலஅதிர்வு தொடங்கும் என்று பிராங் ஹூகர்பீட்ஸ் எச்சரித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அமைச்சர் முகமது இப்ராஹிம் , ஹூகர்பீட்ஸ் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்  “ துருக்கி, சிரியா நிலநடுக்கத்தை அது வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே கணித்த, நெதர்லாந்து ஆய்வாளர் ஹூகர்பீட்ஸ் விரைவில் ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து மிகப்பெரிய பூகம்கம் வரலாம் என எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தொடங்கும் நிலநடுக்கம், பாகிஸ்தான், இந்தியா வழியாக சென்று இந்தியப் பெருங்கடலில் முடியும்”எனத் தெரிவித்துள்ளார்.

 

Dutch researcher who anticipated the quake in and three days ago had also predicted seismic activity anticipating a large size earthquake originating in , through and eventually terminating into the Indian Ocean. pic.twitter.com/qdg4xxREGf

— Muhammad Ibrahim (@miqazi)

அந்த வீடியோவில் ஹூகர்பீட்ஸ் கூறுகையில் “ இந்தப் பகுதிகள் எல்லாமல் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள். ஆனாலும், இந்தப் பகுதியில் பூமித்திட்டுகள் கடினமானவை இந்த கணிப்புகள் தோரமாயனதுதான். அனைத்து நிலநடுக்கங்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதும் உறுதியில்லை. இயற்கை ஒருபோதும் தன்னை முன்கூட்டியே அறிமுகப்படுத்துவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹூகர்பீட்ஸ் கணிப்புக்கு நெட்டிஸன்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். ஹீகர்பீட்ஸ் சொல்வது அனைத்தும் நடந்துவிடுவதில்லை. இயற்கையை யாராலும் கணிக்க முடியாது. ஹீகர்பீட்ஸ் கணிப்பு எத்தனை முறை நடந்துள்ளது, எத்தனை முறை நடக்கவில்லை தெரியுமா என்று விமர்சித்துள்ளனர்.

click me!