Jill biden:கமலா ஹாரிஸ் கணவரின் உதட்டில் முத்தம் கொடுத்த அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடன்: வைரல் வீடியோ

By Pothy Raj  |  First Published Feb 8, 2023, 2:50 PM IST

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கணவர் டக் எம்ஹாப் உதட்டில் அனைவரின் முன்னிலையில் முத்தமிட்டது வைரலாகியுள்ளது.


அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கணவர் டக் எம்ஹாப் உதட்டில் அனைவரின் முன்னிலையில் முத்தமிட்டது வைரலாகியுள்ளது.

அமெிரிக்க பிரதிநிதிகள் சபையை சமீபத்தில் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி பெரும்பான்மைக்கு வந்தனர். பிரதிநிதிகள்சபையில்  ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தபின், முதல்முறையாக அதிபர் ஜோ பைடன் நேற்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உரையாற்றினார். 

Latest Videos

undefined

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி 8ஆயிரமாகஅதிகரிப்பு! உறையும் குளிரால் குழந்தைகள் தவிப்பு

அப்போது அதிபர் ஜோ பைடன் பின்னால் சென்ற அவரின் மனைவி ஜில் பைடன், திடீரென துணை அதிபர் கமலா ஹாரிஸ் கணவர் டக் எம்ஹாப் உதட்டில் முத்தமிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அனைத்து எம்.பிக்களும் இருக்கும் கேபிடல் ஹில் அரங்கில் அதிபர் மனைவி, துணை அதிபரின் கணவரின் உதட்டில் முத்தமிட்டது சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

ட்வி்ட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் இருவரும் முத்தமிட்ட காட்சியையும் பதிவிட்டு நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கமென்ட்டுகளை அள்ளிக் குவித்தனர். இந்த வீடியோ அமெரிக்காவில் பெரும் வைரலாகியது.

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் இதுவரை 5,000 பேர் உயிரிழப்பு... 10 மாகாணங்களில் அவசர நிலை!!

அதில் ஒரு நெட்டிசன் “ஜில் பைடன், கமலா ஹாரிஸ் கணவர் உதட்டில் முத்தமிட்டார், கமலா ஹாரிஸ் வருவதை அவர் பார்க்கவில்லையா” எனக் கிண்டல் செய்துள்ளார்.

 

Did Jill Biden just kiss Kamala's husband on the LIPS?! pic.twitter.com/KvrUxSI8Lu

— Benny Johnson (@bennyjohnson)

மற்றொருவர் வியப்பாக “ என்னது ஜில் பைடன், கமலா ஹாரிஸ் கணவர் உதட்டில் முத்தமிட்டாரா” என்று கேட்டுள்ளார். இதுபோன்று கிண்டல் செய்யும் வார்த்தைகளை வைத்து நெட்டிசன்கள் விளையாடி வருகிறார்கள்.

அதிபர் ஜோ பைடன் பேசுகையில் “ நண்பர்களை எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், கொரோனா பரவல், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற புவிஅரசியல் சூழல் பாதகமாக இருந்தாலும்,  அமெரிக்கப் பொருளாதாரம் பூமியில் எந்த நாட்டையும் விட  வளர்வதற்கு சிறந்த இடத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
 

click me!