துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆயிரமாக அதிகரித்துள்ளது. உறைவைக்கும் குளிரால், இடுபாடுகளி்ல் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆயிரமாக அதிகரித்துள்ளது. உறைவைக்கும் குளிரால், இடுபாடுகளி்ல் இருந்து மீட்கப்பட்ட குழந்தைகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
சாலையெங்கும் கட்டிடக் குவியல்கள் கிடப்பதால், மக்கள் வீடுகளில் தங்க முடியாமல் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலையிலும், தெருக்களிலும் அச்சத்துடன் கழித்து வருகிறார்கள்.
சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், தாய் உயிரிழந்தநிலையில் பச்சிளங்குழந்தை இடிபாடுகளுக்கு மத்தியில் உயிருடன் மீட்கப்பட்டது மீட்புப்பணியில் ஈடுபட்டோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் இதுவரை 5,000 பேர் உயிரிழப்பு... 10 மாகாணங்களில் அவசர நிலை!!
கடும் நிலநடுக்கம்
துருக்கி, சிரியா எல்லைப்பகுதியான காஜியான்தெப் நகரிலிருந்து 33 கி.மீ தொலைவில் ஏற்பட்ட 7ய8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இரு நாடுகளையும் புரட்டிப்போட்டுள்ளது. இந்த பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்ட சிரியா, துருக்கி நகரங்களை சின்னாபின்னமாக்கியது, கட்டிடங்கள் இடிந்து நாசமாகின.
கடந்த 3 நாட்களாக மீட்புப்படையினர் இரவுபகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள், கட்டிடங்களில் இருந்து உயிருடன் இருப்பவர்களை மீட்டு விமானம் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுகிரார்கள். உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதுவரை துருக்கி, சிரியாவில் சேர்த்து 8ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்று ஏஎப்பி செய்திகள் தெரிவிக்கின்றன.
சிரியா நிலநடுக்கத் துயரம்! குடும்பத்தினரை இழந்து இடிபாடுகளில் மீட்கப்பட்ட 18 மாதக் குழந்தை
3 மாதம் அவசரநிலை
இந்த நிலநடுக்கம் துருக்கியை நிலைகுலைய வைத்துள்ளதையடுத்து, அந்நாட்டின் அதிபர் எர்டோகன், 10 மாகாணங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார். துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட மோசமான நிலையைப் பார்த்த உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, சீனா, வளைகுடா நாடுகள் நிவாரணப் பொருட்களையும், மீட்புப்படையினரையும் அனுப்பி வைத்துள்ளன.
நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கியின் கராமன்மராஸ் நகரில் கட்டிடங்கள் பெரும்பாலும் இடித்து தரைமட்டமாகியுள்ளன. இதனால், இங்கு உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியிலும் இங்கு கடும் சிரமப்பட்ட நடந்து வருகிறது.
துருக்கி, சிரியா நிலநடுக்க உயிரிழப்பு 4 ஆயிரத்தைக் கடந்தது: 20ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு
அந்தநகரைச் சேர்ந்த அலி சகிரோலு என்பவர் கூறுகையில் “ என் சகோதரரைக் காணவில்லை, இடிபாடுகளில் சிக்கி இறந்திருப்பார் என நினைக்கிறேன், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. 2 நாட்களாக மீட்டுப்படையினரும் பெரிதாக வரவில்லை, குழந்தைகள் கடும் குளிரால் நடுங்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்
குழந்தைகள் தவிப்பு
சிரியா, துருக்கியில் உறையவைக்கும் பனி வீசுவதால், இரவுநேரத்தில் மீட்புப்பணியில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் கட்டிடக் குவியல்கள் கிடப்பதால், பிராதன சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கப் பேரழிவை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்!
கடும் குளிரையும் தாங்கிக்கொண்டு சிலர் சாலையில் தங்கியுள்ளனர். பெரும்பலான மக்கள் மசூதிகள், பள்ளிகள், பேருந்துகளிலும், கட்டிடக் குவியல்களுக்கு அடியிலும் தங்கியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில் “ இனப்பாகுபாடுக்கு எதிரான நேரம் இது. உலக சுகாதார அமைப்பின் அவசரகாலக் குழு, மருத்துவக் குழு உடனடியாக சிரியா, துருக்கி செல்ல உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
8ஆயிரம் பேர் பலி
இதுவரை துருக்கியில் மட்டும் 5,434 பேர் உயிரிழந்திருக்கலாம், சிரியாவில் 2500 பேருக்கும் மேல் பலியாகி இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில் 8ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு கூறுகையில் இந்த நிலநடுக்கத்தால் சிரியா, துருக்கியில் சேர்த்து 20ஆயிரம் மக்கள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆதலால் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கில் உலக நாடுகள் வேற்றுமையை மறந்து உதவி செய்ய வேண்டும், மீட்டுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தடையை நீக்குங்கள்
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளதார தடையை நீக்க வேண்டும், இந்த நேரத்தில் உதவ வேண்டும் என சிரியா வேண்டுகோள் விடுத்துள்ளது.சிரியாவின் அலெப்பே நகரம், துருக்கியின் தியார்பகிர் நகரங்களில் யுனெஸ்கோவின் பழங்கால சின்னங்கள் அழிந்திருக்கலாம் அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.