சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.
சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் துருக்கியின் 10 மாகாணங்களில் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார். சிரியா மற்றும் துருக்கியில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதையும் படிங்க: பரிதாப நிலையில் எலான் மஸ்க்! கடுமையான முதுகுவலி, வாரத்தில் 7 நாளும் வேலை, மன அழுத்தம்
இதை அடுத்து மீட்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தகவல் வெளியானகின. இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் இதுவரை 5,000 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பல வீடுகள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: இந்த 13 வயது சிறுமிதான் உலகிலேயே புத்திசாலி மாணவி! எல்லா டெஸ்டிலும் நம்பர் 1!
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,000-ஐ தாண்டும் என கூறப்படுகிறது. மேலும் மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உயிரிழப்பு 8 மடங்கு அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாதம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.