நடாஷா பெரியநாயகம் என்ற 13 வயது சிறுமி உலகின் திறன் வாய்ந்த மாணவி என்ற பெருமையை தொடர்ந்து 2வது முறையாகப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த திறன்மிக்க இளைஞர்களுக்கான ஜான் ஹாப்கின்ஸ் மையம் ஆண்டுதோறும் உலகின் அறிவுத்திறன் மிக்க மாணவர்களைக் கண்டெடுக்கும் போட்டி நடத்தி வருகிறது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக அறிவுத்திறனைப் பரிசோதிக்கும் தேர்வுகள் வைக்கப்படும்.
2022ஆம் ஆண்டுக்கான இந்தப் போட்டியில் 76 நாடுகளிலிருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டார்கள். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரியநாயகம் என்ற 13 வயதே ஆன மாணவி முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான போட்டியிலும் கலந்துகொண்ட நடாஷா அப்போதும் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார். இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பரிதாப நிலையில் எலான் மஸ்க்! கடுமையான முதுகுவலி, வாரத்தில் 7 நாளும் வேலை, மன அழுத்தம்.
இதேபோல அந்நாட்டில் நடத்தப்படும் பல திறன் மதிப்பீட்டுப் போட்டிகளிலும் நடாஷா பங்கு கொண்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடாஷா நியூ ஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் கவுடினீர் நடுநிலைப் பள்ளியில் படிக்கிறார். இவரது பெற்றோர் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
நடாஷாவுக்கு ஓவியங்கள் வரைவதும் ஜே.ஆர்.ஆர். டோல்கீன் நாவல்களைப் படிப்பதும் பிடித்தமானவை என்உற அவரது பெற்றோர் கூறுகின்றனர்.
ஜான் ஹாப்கின்ஸ் மையத்தின் இந்தப் போட்டி உலக அளவில் பல நாடுகளின் திறன் வாய்ந்த மாணவர்களைக் கண்டுபிடித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுவருகிறது.