துருக்கி, சிரியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சொல்லமுடியாத துயரங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் 18 மாதக் குழந்தை தாயை இழந்து, குடும்பத்தினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
துருக்கி, சிரியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சொல்லமுடியாத துயரங்கள் ஏற்பட்டுள்ளன. சிரியாவில் 18 மாதக் குழந்தை தாயை இழந்து, குடும்பத்தினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சிரியா, துருக்கி எல்லையில் நேற்று அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி, சிரியா நிலநடுக்க பலி 4 ஆயிரத்தைக் கடந்தது: 20ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு-WHO
உலக சுகாதார அமைப்பு கணப்பின்படி, சிரியா, துருக்கியில் நிலநடுக்க பாதிப்பால் 20ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளது. சிரியா, துருக்கி எல்லைப்பகுதி நகரங்களில் வீடுகள், கட்டிடங்கள், வர்த்தக மையங்கள் இடிந்து நாசமாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் இரவு பகலாக நடந்து வருகிறது. சிரியா, துருக்கி நாடுகளுக்கு உதவ பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன
17 ஆயிரம் பேர் பலி! துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு
இதில் சிரியாவில் அஜாஸ் நகரில் நிலநடுக்கத்தால் ஒரு அடுக்குமாடி வீடி இடிந்து தரைமட்டமானது. இந்த வீட்டின் இடுபாடிகளில் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என மீட்புப்படையினர் தேடினர். அப்போது, 18 மாதங்கள் நிறைவடைந்த ராஹத் இஸ்மாயில் என்ற குழந்தை மட்டும் உயிருடன் மீட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி இந்த குழந்தையின் தாய், உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும்உயிரிழந்தனர்.இந்த பூகம்பத்தால் 18மாத குழந்தை ராஹத் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ராஹத் இஸ்மாயிலின் உறவினர் அபு ஹூசம் கூறுகையில் “ நிலநடுக்கத்தால் ராஹத் இஸ்லாமாயில் கடும் முற்றிலும் உயிரிழந்துவிட்டது என்று நம்புகிறேன். ராஹத் தந்தை இடிபாடுகளில் இருந்து இன்னும் மீட்கப்படவில்லை, அவரின் கர்ப்பணி மனைவி, 2 மகன்கள் அனைவரும் இடிபாடுகளில்சிக்கி உயிரிழந்தனர்” எனத் தெரிவித்தார்
நிலநடுக்கத்தால் குடும்பத்தினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குச் சென்ற ராஹத் இஸ்மாயில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதுகூட அறியாமல் சிறிய ரொட்டித்துண்டை கடித்துக்கொண்டு மெத்தையில் விளையாடி வருகிறான். இந்த காட்சி நெட்டிசன்கள் மனதை உருக்கும் வித்தில் இருக்கிறது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைநத்போது, மொரேக் நகரில் இருந்து இடம் பெயர்ந்து அஜாஸ் நகருக்கு இஸ்லாமாயில் குடும்பத்தினர் குடிபெயர்ந்தனர். துருக்கி எல்லையில் அஜாஸ் நகரம் அமைந்துள்ளது.