
turkey earthquake: துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4ஆயிரத்தைக் கடந்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உயிரிழப்புகள் வரும் நாட்களில் 20ஆயிரத்தை எட்டக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா எல்லைப்பகுதி மாகாணங்களில் 7.8 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காஸியென்டெப் நகரிலிருந்து 33 கி.மீ தொலைவில்நேற்று முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத்த தொடர்ந்து 100கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.
17 ஆயிரம் பேர் பலி! துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு
இந்தநிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் கட்டிடங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் இடிந்து தரைமட்டமாகின. ஏற்கெனவே சிரியாவில் உள்நாட்டுப் போரால்அந்த தேசமே உருக்குலைந்து கிடக்கும் நிலையில், நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
துருக்கியில் மட்டும் நிலநடுக்கத்தால் குறைந்தபட்சம் 3500 கட்டிடங்கள் இடிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. துருக்கி, சிரியாவில் சேர்த்து இதுவரை உயிரிழப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று ஏஎப்பி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள், வீடுகளில் தங்குவதற்கு அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், அடுத்தடுத்து நடக்கும் நிலநடுக்கத்தால் சாலையில் ஆங்காங்கே இருக்கும் கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சியைக் கண்டு மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
துருக்கியில் நேற்றுஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தொடர்நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. துருக்கியின் மத்தியப்பகுதியில் நேற்று இரவு 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக யூரோ-மத்தியத்தரைக்கடல் நிலவியல் மையம் தெரிவித்துள்ளது.
வரலாறே காணாத சம்பவம்!.. நிலநடுக்கத்தால் சின்னாபின்னமான துருக்கி, சிரியா, இத்தாலி - 500 பேர் பலி!
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்களில் மொத்தம் 1.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி இரவுபகலாக நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்கள், மீட்கப்பட்டு ராணுவ விமானங்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.
சன்லிருபா மாகாணத்தில் 22 மணிநேரத்துக்குப்பின் ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டார், மலாட்யா பகுதியில் 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
துருக்கி நிலநடுக்கப் பேரழிவை முன்கூட்டியே கணித்த ஆய்வாளர்!
சிரியா, துருக்கி நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு உலக நாடுகள் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. முதல்நாடாக இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவும் நிவாரண உதவியை அறிவித்துள்ளன.