Turkey Airport Spilt: துருக்கி விமான நிலையத்தை இரண்டாகப் பிளந்த நிலநடுக்கம்

Published : Feb 07, 2023, 12:09 PM IST
Turkey Airport Spilt: துருக்கி விமான நிலையத்தை இரண்டாகப் பிளந்த நிலநடுக்கம்

சுருக்கம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் ஹடாய் விமான நிலைய ஓடுதளம் இரண்டாகப் பிளந்து முற்றிலும் பயன்படுத்த முடியாததாக ஆகிவிட்டது.

துருக்கியின் தென் மத்திய பகுதியில் திங்கட்கிழமை அதிபயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 வரை பதிவான இந்த நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழ்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் உள்ள ஒரே ஓடுபாதையில் பிரம்மாண்டமாக பிளவு ஏற்பட்டுள்ளது. விமான ஓடுபாதை இரண்டாகப் பிளந்து கிடப்பதால் அதனைப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. இதனால் அந்த விமான நிலையமே இயங்கமால் முடங்கியுள்ளது.

மோசமாக பிளவுபட்டிருக்கு விமான ஓடுதளத்தைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

TURKEY EARTHQUAKE:துருக்கி, சிரியா நிலநடுக்க பலி 4 ஆயிரத்தைக் கடந்தது: 20ஆயிரமாக அதிகரிக்க வாய்ப்பு-WHO

அந்நாட்டின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக காஜியான்டெப் கோட்டையும் இந்த நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிவிட்டது. 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோட்டையைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். ஐ.நா.வும் இந்தக் கோட்டையை பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்திருக்கிறது. இந்தக் கோட்டை நாசமானது அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக நாடுகள் துருக்கியின் நிலநடுக்கத் பேரிடருக்கு நிவாரண உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Turkey Earthquakes: 17 ஆயிரம் பேர் பலி! துருக்கியை உருக்குலைத்த பயங்கர நிலநடுக்கங்களின் வரலாறு

PREV
click me!

Recommended Stories

Check Mate: மோடியுடன் புதின் குடித்த பாயாசத்தால், கலங்கிய அமெரிக்க அதிபரின் அடிவயிறு...! இந்தியாவை முக்கிய கூட்டாளி என அறிவித்த டிரம்ப்.!
ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!