மீட்பு மற்றும் மருத்துவக்குழுக்களை அனுப்பிய இந்தியா... நன்றி தெரிவித்து நெகிழ்ந்த துருக்கி!!

By Narendran S  |  First Published Feb 8, 2023, 12:32 AM IST

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவக்குழுக்களை அனுப்பிய நிலையில் இந்தியாவுக்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது. 


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு மீட்பு மற்றும் மருத்துவக்குழுக்களை அனுப்பிய நிலையில் இந்தியாவுக்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது. துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்தன. மேலும் இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் இதுவரை 5,000 பேர் உயிரிழப்பு... 10 மாகாணங்களில் அவசர நிலை!!

Latest Videos

undefined

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய செய்யும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் தேடுதல் வீரர்களையும் மருத்துவர்களையும் துருக்கிக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: இந்த 13 வயது சிறுமிதான் உலகிலேயே புத்திசாலி மாணவி! எல்லா டெஸ்டிலும் நம்பர் 1!

இந்த நிலையில், இந்தியாவுக்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது. இதுக்குறித்து இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிரத் சுனெல், தனது டிவிட்டர் பக்கத்தில், தோஸ்த் என்பது துருக்கிய மற்றும் இந்தியில் பொதுவான வார்த்தை. நமக்கு ஒரு துருக்கிய பழமொழி உண்டு. ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்பது தான் அது. மிக்க நன்றி இந்தியா என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். 

"Dost" is a common word in Turkish and Hindi... We have a Turkish proverb: "Dost kara günde belli olur" (a friend in need is a friend indeed).
Thank you very much 🇮🇳 https://t.co/nB97RubRJU

— Fırat Sunel फिरात सुनेल فرات صونال (@firatsunel)
click me!