Turkey Satellite Images: துருக்கி நிலநடுக்கத்தின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

By SG BalanFirst Published Feb 8, 2023, 4:13 PM IST
Highlights

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கட்கிழமை நேர்ந்த பயங்கர நிலநடுக்கத்தில் 8000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கிறார்கள். காயங்களுடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரம் வரை உயரலாம் என்று சொல்லப்படுகிறது.

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் அந்நாட்டு அதிபர் தயீப் எட்டோகன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். நாட்டில் மொத்தம் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் துருக்கியில் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியைத் துரிதப்படுத்துவதும் சிரமமாக உள்ளது.

Turkey Syria Earthquakes: நெஞ்சை பதற வைக்கும் துருக்கி, சிரியா நிலநடுக்கக் காட்சிகள்


நிலநடுக்கத்திற்கு முன் (செப்டம்பர் 6, 2019)
 

சிரியாவில் உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதால் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. மேலும், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களும் பயங்கரவாதிகளும் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மீட்புப் பணியை மேற்கொள்வதும் சிக்கலாக இருக்கிறது. இதனால், பிற நாடுகளில் இருந்து வரும் நிவாரண உதவிகளையும் முறையாக விநியோகம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


நிலநடுக்கத்திற்கு ன் (பிப்ரவரி 7, 2023)
 

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாக்ஸர் டெக்னாலஜீஸ் நிறுவனம் துருக்கியில் நிலநடுக்கத்துக்கு முன் மற்றும் பின் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நிலநடுக்கத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்லாஹியே, நுர்தாகி, டுஸிசி ஆகிய நகரங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

Turkey Earthquake:துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி 8ஆயிரமாகஅதிகரிப்பு! உறையும் குளிரால் குழந்தைகள் தவிப்பு

click me!