பத்தாண்டுகளாக கணவரின் சடலத்தை பிரீசரில் வைத்து மனைவி செய்த பயங்கரம்..!! இப்படியெல்லாமா செய்வாங்க..!!

Published : Dec 19, 2019, 12:01 PM ISTUpdated : Dec 19, 2019, 12:12 PM IST
பத்தாண்டுகளாக கணவரின் சடலத்தை பிரீசரில் வைத்து மனைவி செய்த பயங்கரம்..!!  இப்படியெல்லாமா செய்வாங்க..!!

சுருக்கம்

ஜூனின்  கணவர்  பால் எட்வர்ட்ஸ்ன் சடலம்   பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது,  வீட்டிற்குள் சடலம் இருந்தது கண்டு  ராணுவ அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர் .   

இறந்த கணவரின் உடலை 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவி   ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்காவின் உடா மாநிலத்தின் டூயெலி நகரை சேர்ந்தவர் ஜீன் சவுரோன் - மாதர்ஸ் (75)  வயதான இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ்  இறந்த பின்னர் மனைவி  ஜூன் மட்டும்  வீட்டில் தனியாக வசித்து வந்தார் .  அவரது கணவர் முன்னாள் ராணுவ வீரர்  ஆவார் . 

இந்நிலையில் திடீரென கடந்த மாதம் 22ஆம் தேதி ஜூன் வீட்டிற்கு ராணுவ அதிகாரிகள் வந்து  சோதனை மேற்கொண்டனர் .  அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜூன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார் எனவும் காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது  இந்நிலையில் ஜூன்  வீட்டை சோதனை செய்த ராணுவ வீரர்களுக்கு மிகுந்த  அதிர்ச்சி  ஒன்று  காத்திருந்தது .  ஜூனின்  வீட்டு  பிரீசரில் சோதனையிட்ட போது,  ஜூனின்  கணவர்  பால் எட்வர்ட்ஸ்ன் சடலம்   பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது,  வீட்டிற்குள் சடலம் இருந்தது கண்டு  ராணுவ அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர் . 

அப்போது ஜூன் உடலுடன் சேர்ந்து ஒரு கடிதமும் இருந்தது அதில் என் மனைவி என்னை கொல்லவில்லை என்று எழுதப்பட்டுள்ளது .  அது பால் எட்வர்ட்ஸ் கையெழுத்து தான் எனவும் கடிதம் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் காவல்துறையினர் கைது செய்தனர் . கணவர் மீதான பாசத்தினால் கடந்த பத்தாண்டுகளாக பாலில் உடலை வீட்டிற்குள்ளாகவே வைத்து மனைவி பாதுகாத்து வந்துள்ளாரா அல்லது அவருக்கு மன நோய் எதாவது உள்ளதா வேறு என்னதான் காரணம் என்று  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது..! பதிலடி முன்பை விட இன்னும் பயங்கரமா இருக்கும்..! அசிம் முனீர் மிரட்டல்..!
இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!