மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனா..!! வச்சு செஞ்ச பிரான்ஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2019, 5:10 PM IST
Highlights

அதில்  தலையிட சீனாவுக்கு  அதிகாரமில்லை என உறுப்பு நாடுகள் பகிரங்கமாக தெரிவித்தன .  இதனையடுத்து சீனா தனது கோரிக்கை  குறிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து மீண்டும் பிரச்சினையை எழுப்ப சீனா முயன்றபோது பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எதிர்ப்பு  தெரிவித்ததால் சீனா அதை கைவிட்டுள்ளது .  இந்தியா விவகாரத்தில்  மீண்டும் சீனா மூக்கை நுழைத்து, இந்தியாமீது தனக்குள்ள வெருப்பை வெளிபடுத்தியிருப்பது    இந்தியாவுக்கு கடும் கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது .  காஷ்மீரில் சட்டப்பிரிவு  370 ரத்து செய்ததுடன், மத்திய அரசு  காஷ்மீரில் முழுவதையும்  இந்தியாவுடன் இணைத்தது.  

 

இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  சீனாவின் உதவியுடன் ஐநா மன்றம் வரை கொண்டு சென்று இதை சர்வதேச பிரச்சினையாகி உள்ளது .  ஏற்கனவே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதை புகாராக கொண்டு சென்ற பாகிஸ்தான்,  சர்வதேச நாடுகள் தலையிட்டு காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது, ஆனால் காஷ்மீர்  பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், தேவைப்பட்டால் அதில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் ஐநா மன்றம் தலைஇட மறுத்துவிட்டது.  இதனால் இந்த விவகாரத்தில்  சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வாய் மூடிக் கொண்டன . ஆனாலும் காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிலுவையில் உள்ளது.

 

முன்னதாக காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூடிய அறைக்குள் கமுக்கமாக விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று  சீனா வைத்த கோரிக்கையை  கடந்த ஆகஸ்ட் மாதம் ஐநா உறுப்பு நாடுகள்  நிராகரித்துவிட்டன,  இந்நிலையில் பாகிஸ்தான் சார்பில் ஐநா கவுன்சிலில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினை எழுப்ப சீனா முயற்சித்தது .  இதற்கு பிரான்ஸ் ,  ரஷ்யா உள்ளிட்ட நிரந்தர உறுப்பு நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன,  அத்துடன் காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேசி தீர்வு காணப்பட வேண்டிய விவகாரம்,  அதில்  தலையிட சீனாவுக்கு  அதிகாரமில்லை என உறுப்பு நாடுகள் பகிரங்கமாக தெரிவித்தன .  இதனையடுத்து சீனா தனது கோரிக்கை  குறிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டது.  இனி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை விவாதிக்கப்படாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது . 

click me!