காதலிப்பதுபோல் நடித்து 5 பெண்களிடம் உல்லாசம் ...!! 6 வதாக காதலித்த பெண்ணையும் அடித்து கொன்ற பயங்கர சைகோ..!!

By Ezhilarasan Babu  |  First Published Dec 18, 2019, 2:00 PM IST

அதாவது இந்த நபர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் பழகி  அந்த பெண்களை  காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் உடலுறவு கொள்வதை  வழக்கமாக வைத்துள்ளார்  


ஏற்கனவே  ஐந்து பெண்களை கடத்தி கற்பழித்து கொடூரமான முறையில் கொலை செய்த சைக்கோ கொலையாளியை மீண்டும் போலீசார் கொலை குற்றத்திற்காக தேடி வருகின்றனர் .  ஒருமுறை குற்றம் செய்து சிறை தண்டனை அனுபவித்து விட்டால்   அந்த நபருக்கு சிறை மீதான அச்சம் நீங்கிவிடும் , பிறகு  அடுத்தடுத்து கொலைகளையோ குற்றங்களையோ செய்ய அந்த நபர் தயங்குவதில்லை ,  அதற்கு காரணம் சிறைகளில் கடுமையானதாக இல்லை உள்ளே சென்றால்  சொகுசு வாழ்க்கை தான் என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறோம், தற்போது அது உண்மைதான் போலிருக்கிறது என்று கூறும் வகையில் ஒரு சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. 

Latest Videos

சிறையிலிருந்து விடுதலையான நபர்,  திருந்தி வாழ்வதற்கு பதிலாக  எந்த குற்றத்திற்காக சிறை சென்றாரோ அதே குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வது  சிறை தண்டனை மீதான எண்ணத்தை கேள்வி எழுப்புவதாக உள்ளது.   தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் சோன்கித் பும்பாங் (55) வயதான இவர் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2005ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார் .  அதாவது இந்த நபர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் பழகி  அந்த பெண்களை  காதலிப்பது போல் நடித்து அவர்களுடன் உடலுறவு கொள்வதை  வழக்கமாக வைத்துள்ளார்  அத்துடன் அந்தப் பெண்களிடம் பணத்தை ஏமாற்றி  உல்லாசமாக இருப்பார்,  ஆனால் அந்த பெண்கள் தனக்கு பணம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களை அடித்து கொலை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.  இப்படியாக ஒரே மாதிரியாக கொடூரமான முறையில் ஐந்துக்கும் மேற்பட்ட பெண்களை கொலை செய்த குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 

பல ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வந்த இவர் நன்னடத்தை  காரணமாக கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார் ,  அத்துடன் சிறையில் போதுமான இட வசதிகள் இல்லாததால் இல்லாததால்  பல கைதிகளை விடுவிக்கும்  சூழ்நிலை அந்நாட்டில் உள்ளது.   இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த சோன்கித் பும்பாங் விடுதலையான சில மாதங்களிலேயே 51 வயதான ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை தனது பாணியில் காதலித்து மீண்டும் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் . இதனால்  சீரியல் கில்லர் பட்டியலில் இடம்பெற்றுள்ள  சோன்கித் பும்பாங்கை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
.

click me!